லால் சலாம் நன்றாக இருக்கிறதா ?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேஸ்ட்ரோலில் நடிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் லால் சலாம்.

ஜெயிலரின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறார் அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதிலும் நிஜ வாழ்க்கையில் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்களை தாண்டி, இப்படம் மத ஒற்றுமையை பேசுவதால், படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது

ஒரு கிராமத்தில் ந்டக்கும் இந்து முஸ்லிம் சண்டை தான் கதைக்களம்.

மொய்தீன் பாய் எனும் பாத்திரத்தில் ரஜினி,

ஒரு அழகான கிராமம் அங்கு மொய்தீன் பாய் உருவாக்கிய கிரிக்கெட் அணியில், அவரது மகன் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் விளையாடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் பொறாமையால் அந்த அணியில் இருந்து, விஷ்ணு விஷால் நீக்கப்பட, அவர் வெளியில் சென்று வேறொரு அணியை ஆரம்பிக்கிறார். இப்போது அந்த ஊரில் இந்து முஸ்லீம் என இரு அணிகள்.

இரு அணிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனை வழியே, இந்து முஸ்லிம் பிரச்சனையை பற்றி பேசுவதுடன், ஒற்றுமையை, சமத்துவத்தையும் பேசியுள்ளது.

ரஜினி தான் படத்தின் ப்ளஸ். அதை உணர்ந்து அவரைப் படம் முழுக்க வர வைத்துள்ளார்கள். தந்தையாகவும் சமூகத் தலைவராவும் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இரட்டைப் பொறுப்புகளை மிக அழகாகச் செய்திருக்கிறார். மேலும் சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

ரஜினிக்கு அடுத்து பெரிய ரோல் விஷ்ணு விஷாலுக்கு, நிஜ வாழ்வில் கிரிக்கெட் விளையாடுவதால், படத்திலும் விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் கிரிக்கெட் வீரர்களாக நன்றாக நடித்திருக்கிறார்கள். உண்மையில் விக்ராந்த் தான் கெஸ்ட் ரோல் ஆனாலும் கொடுக்கப்பட்டதை சிறப்பாகவே செய்துள்ளார்.

கிராமத்து இசையாக இல்லாமல் சூஃபி கலந்த் இசையில் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

நான் லீனியரில் ப்ளாஷ்பேக் கலந்து முன் பின்னாக நகர்கிறது திரைக்கதை. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத சம்பவங்கள் குழப்பமாகவும் இருப்பதால் முதல் பாதி கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஆறுதல்.

இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்தை சொன்னதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்