நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்! “ஹாட் ஸ்பாட் 2 ” விழாவில் விஷ்ணு விஷால்!

நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்! “ஹாட் ஸ்பாட் 2 ” விழாவில் விஷ்ணு விஷால்!

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB  Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட  இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் , இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது, ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி,  நீங்கள் தந்த ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும்  நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால்…
Read More
சினிமாவை ஒதுக்கி வைக்க போகிறோம் !செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா!

சினிமாவை ஒதுக்கி வைக்க போகிறோம் !செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா!

      செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்றும் கங்கா பிரசாத் நிறுவனராக உள்ளார். அதுபோக சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பலமுக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.   23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது. சென்னை…
Read More
லால் சலாம் நன்றாக இருக்கிறதா ?

லால் சலாம் நன்றாக இருக்கிறதா ?

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேஸ்ட்ரோலில் நடிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் லால் சலாம். ஜெயிலரின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறார் அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதிலும் நிஜ வாழ்க்கையில் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்களை தாண்டி, இப்படம் மத ஒற்றுமையை பேசுவதால், படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது ஒரு கிராமத்தில் ந்டக்கும் இந்து முஸ்லிம் சண்டை தான் கதைக்களம். மொய்தீன் பாய் எனும் பாத்திரத்தில் ரஜினி, ஒரு அழகான கிராமம் அங்கு மொய்தீன் பாய் உருவாக்கிய கிரிக்கெட் அணியில், அவரது மகன் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் விளையாடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் பொறாமையால் அந்த அணியில் இருந்து, விஷ்ணு விஷால் நீக்கப்பட, அவர் வெளியில் சென்று வேறொரு அணியை ஆரம்பிக்கிறார். இப்போது அந்த ஊரில் இந்து முஸ்லீம் என இரு…
Read More
இந்த படம் எனக்கு கிடைத்த பரிசு! லால் சலாம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷ்னு விஷால்!

இந்த படம் எனக்கு கிடைத்த பரிசு! லால் சலாம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷ்னு விஷால்!

  பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் செந்தில் பேசியதாவது, நடிகர் செந்தில் பேசும் பொழுது அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். நடிகர் விக்ராந்த் பேசியதாவது, விக்ராந்த் அவர்கள் பேசும் பொழுது தனது சினிமா…
Read More
அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி வலம் வருகிறார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி ஷங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைச்சுது. அதேவேகத்தில் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிச்சார் அதிதி ஷங்கர். இந்தப் படம் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மாவீரன் படத்தில் அதிதி கமிட்டான போதே இளம் நடிகைகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால், அதிதி எளிதாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகிவிடுவதாக சொல்லப்பட்டுச்சு. தற்போது அமலா பால் நடிக்க வேண்டிய படத்திலும் அதிதி கமிட்டாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முதன்முறையாக உருவான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இதனையடுத்து இக்கூட்டணியில் வெளியான 'ராட்சசன்' ஹாரர் ப்ளஸ் சைக்கோ…
Read More
ரஜினியின் 170வது படத்துக்கு வில்லனாக விக்ரம்! ரஜினியின் ஆசையை நிறைவேற்றுவாறா?

ரஜினியின் 170வது படத்துக்கு வில்லனாக விக்ரம்! ரஜினியின் ஆசையை நிறைவேற்றுவாறா?

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிரது . இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிரது. லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை மார்ச் 23 அன்று லைகா நிறுவனம் வெளியிட்டது, இந்த படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்தப்படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் நிறைவடைந்துவிட்டது . இந்நிலையில், அந்தக்கதையில் மிகவும் சக்தி வாய்ந்த வில்லன் வேடம் இருக்கிறதாம். அந்த வேடத்தில் விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர் நினைத்திருக்கிறார். அதை ரஜினியும் ஒப்புக்கொண்டாராம். தயாரிப்பு நிறுவனத்துக்கும் அதில் மகிழ்ச்சி. இதனால், விக்ரமை தொடர்புகொண்டு தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அவர், உடனே மறுத்துட்டாராம். ஆனாலும் விடாமல், கதையைக் கேட்டுப்பாருங்கள்…
Read More
F I R திரை விமர்சனம் !

F I R திரை விமர்சனம் !

இயக்கம் - மனு ஆனந்த் இசை - அஷ்வத் நடிகர்கள் - விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரைசா வில்சன் ஒரு முஸ்லீம் பெயர் இருப்பாதாலேயே ஒருவன் வாழ்வில் என்னென்ன சிக்கல்களை அனுபவிக்க வேண்டி வரும். நம் நாடு இன்றைய காலகட்டத்தில் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை இது தான் இந்த திரைப்படத்தின் மையம். சென்னையில் கெமிக்கல் இன்ஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் இர்ஃபான். அன்பான அம்மா அழகான வாழ்க்கை என எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவர் பார்ட் டைமாக வேலை செய்ய போகும் இடத்தில் நம் அரசாங்கம் கண்காணிக்கும் தீவிரவாதியை சந்திக்கிறார். நேஷனல் அதிகாரிகள் இர்ஃபானை பிந்தொடர அவர் போன இடத்தில் பாம் வெடிக்க பழி அவர் மேல் விழுகிறது. தன் முஸ்லீம் பெயரால் பழிக்கு ஆளாகியுள்ள நாயகன் அதிலிருந்து வெளிவருகிறாரா என்பது தான் படம். சிறுபான்மையினரான முஸ்லீம் நண்பர்கள் மீது இந்தியாவில் தற்போது நடந்து வரும்…
Read More
விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ் ‘ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

  நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'மோகன்தாஸ்' படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன் தாஸ்'. 'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான பணிகளில்…
Read More
எமோஷனல் த்ரில்லரான ‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

எமோஷனல் த்ரில்லரான ‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது. 'மோகன்தாஸ்' படத்தை 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம்  ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு…
Read More
விஷ்ணு விஷால் நடித்த ‘ இன்று நேற்று நாளை’ பட இரண்டாம் பாகம் பூஜை1

விஷ்ணு விஷால் நடித்த ‘ இன்று நேற்று நாளை’ பட இரண்டாம் பாகம் பூஜை1

விஷ்ணு விஷால் நடிப்பில் 2015 ஆண்டு வெளிவந்த திரைப்படம் இன்று நேற்று நாளை.இந்த படத்தில் விஷ்ணு விஷாலிற்கு ஜோடியாக மியா நடித்திருந்தார்.டைம் டிராவலை மையமாக வைத்து தமிழில் உருவாகிய முதல் படம் இதுதான்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.நல்ல வசூலும் கிடைத்தது. எதிர்காலத்தில் கண்டுபிடித்த டைம் டிராவல் மெஷின் நிகழ் காலத்தில் வாழ்பவர்கள் கையில் கிடைத்ததால் ஏற்படும் சிக்கல்கள், அதை எப்படி கதாநாயகன் சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பது தான் முதல் பாகத்தின் கதை. இந் நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் கதாநாயகி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் கார்த்திக் பொன்ராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. பல ஹிட்…
Read More