சுவிட்சர்லாந்தில் ஷூட் செய்யப்படும் பேய்ப் படம் ‘ரிங் ரோடு’.!.

B.R.எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிஜோ எண்டெர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரிங் ரோடு’. இத்திரைப்படத்தில் சிந்துஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன்  வையாபுரி, சிசர் மனோகர், ரஞ்சன்,  ‘தீப்பெட்டி’ கணேசன், ‘கிரேன்’ மனோகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். 

இசை – நூர் லகான், ஒளிப்பதிவு – கொளஞ்சிக்குமார், படத் தொகுப்பு – பிரேம், சண்டை பயிற்சி – நோபேர்ட் எரிக் பென்னி போர்ஸ், நடன இயக்கம் – சந்திரிகா, எழுத்து, இயக்கம் – ஏ.எம்.பாஸ்கர்.

இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் ஏ.எம். பாஸ்கர் கூறுகையில், “இத்திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவுள்ளது. முழுக்க, முழுக்க சுவிட்ஸ்ர்லாந்தில் படமாக்கப்படவிருக்கும் இந்த ‘ரிங் ரோடு’ திரைப்படம் வித்தியாசமான ஒரு பேய் படமாக இருக்கும்.

கதாநாயகியிடம் காதலை சொல்லும் வாலிபர்கள் அனைவரும் மர்மமான முறையில் மரணமடைகின்றனர். ஆனால் அவளிடம் காதலை வெளிப்படுத்தும் கதாநாயகன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அதற்கான காரணம் என்ன? கதாநாயகன் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சொல்லவரும் படம்தான் இந்த ‘ரிங் ரோடு’.  டிசம்பர் முதல் வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது…”என்றார்.