மிஷன் சாப்டர் ஒன் ஆக்சனில் கலக்கியதா ?

இயக்குனர் விஜய் நடிகர் அருண் விஜய் கூட்டணியில உருவாகி இருக்கிற ஆக்சன் படம்.

முதல்ல அச்சம் என்பது இல்லையே என்று இருந்த இந்தப் படம் மிஷன் சாப்டர் 1 ஆ மாறி இருக்கு.

இந்த பொங்கல் ஸ்பெஷலா வந்திருக்கிற மெஷின் சாப்டர் ஒன் எப்படி இருக்கு ?

கதை – தன் குழந்தையோட ஆபரேஷனுக்காக லண்டன் போற அருண் விஜய், அங்கே எதிர்பாராத விதமா ஒரு கேஸ்ல சிக்கி, ஜெயிலுக்குள்ள போய்ட்றாரு. அந்த ஜெயில்ல இருக்க தீவிரவாதிகளை விடுவிக்க, ஒரு மிஷன் அங்க நடக்குது. தீவிரவாதிகள் நடத்துற அந்த ஆபரேஷன்ல இருந்து, அந்த ஜெயில எப்படி ஹீரோ காப்பாத்துறாரு, ஏன் காப்பாத்தறாரு, யார் அவரு ? இதெல்லாம் தான் இந்த படம்.

முழுக்க முழுக்க லண்டனிலேயே நிறைய காட்சிகள் எடுத்திருக்காங்க. இயக்குநர் விஜய் மெலோ டிராமா படங்கள்தான் இதுவரைக்கும் எடுத்திருக்கிறார், அவர் முதல்முறையா ஒரு முழு ஆக்சன் படமா இந்த படத்தை பண்ணி இருக்காரு. அருண் விஜய் நிறைய ஆக்சன் படங்கள் பண்ணி இருந்தாலும், இந்த படத்துல கொஞ்சம் மாறுபட்டு நடிக்க முயற்சி பண்ணி இருக்காரு.

வித்தியாசமான கூட்டணியில் வந்திருக்க ஆக்சன் படம் தான் மிஷன் சாப்டர் 1. இப்ப நிறைய ஆக்சன் படங்கள் இதே மாதிரி கதைகள் வந்ததினால், இந்த ஆக்சன் படம் அந்த அளவுக்கு நம்மள ஈர்க்கல. படத்தோட ஐடியா ரொம்ப சூப்பரா இருக்கு. அதுவும் இன்டர்வல்ல வர்ற அந்த டுவிஸ்ட் எதிர்பாராததுதான்.
ஆனா அதை தொடர்ந்து வர்ற பிளாஷ்பேக், அதுக்கு அடுத்த நடக்குற ஆக்ஷன் காட்சிகளும் படத்துக்கு பிளஸ் அமையாமல் மைனஸா அமைச்சிடுது, ஏன்னா அது கொஞ்சம் கூட நம்பும்படி இல்லாம, திரையில நம்மள கொட்டாவி விட வைக்கிற மாதிரி இருக்கு.

படத்தோட ஜெயில் செட் சூப்பரா போட்டு இருக்காங்க. ஆனால் ஜெயிலுக்குள்ள இருந்து தீவிரவாதிகள் எப்படி தப்பிக்கிறாங்க.. அவங்க கூட ஹீரோ எப்படி ஆக்சன் பண்றாரு ? அதுல கொஞ்சம் கூட லாஜிக்கே இல்ல! ஏதோ வீடியோ கேம் பார்த்திருந்தா கூட இன்னுமே அழகா இது பண்ணி இருக்க முடியும்.

இதுவரை எத்தனையோ ஜெயில் படங்கள் வந்திருக்கு அந்த படங்களில் இருந்து ஐடியாக்கள் கிடைச்சிருக்கும் தீவிரவாதிகள் ஓடிக்கிட்டே இருக்காங்க, ஹீரோவும் அவங்கள தொரத்திட்டே இருக்காரு, தீவிரவாதிகளும் புத்திசாலித்தனமாக எந்த திட்டமும் போடுவதில்லை, ஹீரோவும் புத்திசாலித்தனமா அதை முறியடிக்கவும் இல்லை. சாதாரணமா நம்ம வழக்கமா பாக்குற ஆக்சன் படங்களில் வர அதே ஆக்சன் சீக்குவன்ஸ் தான் இந்த படத்திலும் வருது. புதுசா எதுவுமே இல்லாதது படத்துக்கு பெரிய மைனஸ்.

பல வருஷத்துக்கு அப்புறமா எமி ஜாக்சன் வராங்க லண்டன்ல ஜெயில்ல வேலை பாக்குற ஜெயிலரா நடிச்சிருக்காங்க. இவ்வளவு வீக்கான ஒரு ஜெயிலர் இருக்க மாட்டாங்க பாவம்தான்.

படத்தோட ஆக்சன் காட்சிகளை சிறப்பா அமைச்சு இருந்தாங்கன்னா இது ஒரு அட்டகாசமான படமா அமைஞ்சிருக்கும். அருண் விஜய்க்கும்,டைரக்டர் விஜய்க்கும் ரொம்ப வீக்கான ஒரு படமா இந்த படமா வந்திருக்கு.