‘நாடோடிகள்-2’ திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இயக்குநரும், நடிகருமான சசி குமார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார் சசிகுமார். செந்தூர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கவிருக்கிறார்.
மேலும் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ்கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகிபாபு, கும்கி அஸ்வின், சதிஷ், ஆடம்ஸ், சந்தான லட்சுமி, சரவணா சக்தி, சசிகலா, மணி, யமுனா, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், மணி சந்தனா, நமோ நாராயணன், மணிமேகலை, மீரா, மனோபாலா, லாவண்யா, சிங்கம் புலி, சுந்தர், ரஞ்சனா, நிரோஷா, ரமேஷ் கண்ணா, சமர், ரஞ்சிதா, ரம்யா, சாம்ஸ், தீபா கிரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பிரபல கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சித்தார்த், இசை – சாம்.சி.எஸ்.. கலை இயக்கம் – சுரேஷ், படத் தொகுப்பு – சபு ஜோசப், நிர்வாக தயாரிப்பு N.சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன் பரமசிவம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், தயாரிப்பு – டி.டி.ராஜா, எழுத்து, இயக்கம் – கே.கதிர்வேலு.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமார் நடிக்கும் 19 படமாகும்.
இந்தப் படத்தில் சசிகுமார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வருகின்ற பிப்ரவரி 11-ம் தேதி துவங்குகிறது.