ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். அந்த வகையில்
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது.
இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் ‘நிமிர்’. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார்.
இது குறித்து விஜய் டிவியின் ‘ பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், ” குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம் ”.
Related posts:
‘மீசைய முறுக்கு’ படத்தின் டிரைலர்!July 14, 2017
'8 தோட்டாக்கள்' படத்திற்காக அமைக்கப்பட்ட திருவிழா அரங்கம் !February 6, 2017
ஆமா. வயசுக்கு வந்தவங்க எல்லோரும் பார்க்க வேண்டிய படம்தான் ஹர ஹர மஹாதேவகி!September 23, 2017
Provoke magazine வழங்கிய சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!!August 10, 2019
பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த்June 28, 2019