09
Oct
தமிழ்ப்படம் புகழ் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பெரும் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். தமிழ்ப்படம் 1,2 என எடுத்து தமிழ்ப்படங்களை கலாய்த்து தள்ளிய அமுதன் ஃபுல் சீரியஸ் மோடில் எடுத்திருக்கும் திரைப்படம். பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் பத்திரிக்கையாளராக செழியன் இருக்கிறார். இவரை அடையாளம் தெரியாத இளைஞர் அவரது அலுவலகத்தில் அனைவர் கண்முன்னே ஒருவர் கொலை செய்கிறார். பின் விசாரித்ததில் தன்னுடைய தலைவரைப் பற்றி தவறாக செய்தி எழுதியிருந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்த இளைஞன் கூறுகிறார். ஒரு காலத்தில் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக இருந்து மனைவி இறப்பில் குடிகாரனாக மாறிய விஜய் ஆண்டனி அந்த…