விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

  விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். எதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரின் முந்தைய படங்களான ‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் இப்படமும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக இடம் பெறும். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர்…
Read More
“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

  Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் மெர்வின் பேசியதாவது.., ஹிட்லர் எங்க ரெண்டு பேருக்கும் மிக முக்கியமான படம், விவேக் முக்கிய வேலையால் வர முடியவில்லை. இப்படி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் எங்களைத் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநருக்கு நன்றி. படம் ஆரம்பித்த முதல் நாளே, எங்களை பாராட்டி ஊக்கம் தந்த, தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி. படத்தை முடித்து, படம் திருப்தியாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் ஆண்டனி சார் அருமையாக நடித்துள்ளார். கௌதம் மேனன் சார் ரசிகன் நான், அவர் இந்தப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் தியேட்டரில் பார்த்து ரசிக்கும்படியான ஆக்சன்…
Read More
மழை பிடிக்காத மனிதன் எப்படி இருக்கிறது

மழை பிடிக்காத மனிதன் எப்படி இருக்கிறது

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் மாறியவர், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். இந்த இருவரின் கூட்டணியில் ஒரு புதிய தளத்தில் நல்லதொரு படம் வரும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது. விஜய் ஆண்டனி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, நடித்து வந்தார். ஆனால் இறுதியாக அவர் நடித்த சில படங்கள் கதைகளிலும் சரி, திரைக்கதையிலும் சரி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. சோகமாக அந்த லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்து இருக்கிறது. மழை பிடிக்காத மனிதன் படத்தில் முதல் ஒரு நிமிடத்திற்கு அனிமேஷன் காட்சிகள் வருகிறது. அந்த அனிமேஷன் காட்சிகள் இந்த படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சி என்பதாக சொல்கிறது. ஆனால்…
Read More
விஜயகாந்திற்கான கதாபாத்திரம்!-‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் சத்யராஜ்!

விஜயகாந்திற்கான கதாபாத்திரம்!-‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் சத்யராஜ்!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகை மேகா ஆகாஷ், “எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”. நடிகர் சத்யராஜ், “எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய…
Read More
ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

விஜய் ஆண்டனி ரொமான்ஸ் எதிர்பாராத கூட்டணி படம் எப்படி இருக்கிறது ? விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ரோமியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   விஜய் ஆண்டனியை வைத்து ஒரு ரொமான்ஸ் படம் இந்த ஐடியாவை யோசித்ததற்கே இயக்குனரைப் பாராட்டலாம் விஜய் ஆண்டனி இதுவரையிலும் சோகமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்திருக்கிறார். ஆக்சன் கதைகள், திரில்லர் கதைகள், எமோஷனல் கதைகள் இந்த மாதிரியானப் படங்கள் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தில் தன் களத்திலிருந்து முற்றிலுமாக வெளிவந்து வேறொரு களத்தில் முயற்சித்து பார்த்திருக்கிறார். அது அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முதலில் கதை என்னவென்று பார்த்துவிடலாம் மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய…
Read More
‘ரோமியோ’ படம் குறித்து இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் நெகிழ்ச்சி!

‘ரோமியோ’ படம் குறித்து இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் நெகிழ்ச்சி!

  விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது, "ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய வேண்டும் என்று கனவு இருக்கும். ஏனென்றால் அவர் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார். நான் 'ரோமியோ' படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் ​​விஜய் ஆண்டனி சார் அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ரொமாண்டிக்…
Read More
ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு நடித்த படம் இது! ஹிட்லர் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி!

ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு நடித்த படம் இது! ஹிட்லர் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி!

  Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகை ரியா சுமன் பேசியதாவது… எனக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம். இயக்குநர் தனா, மணி சார் ஸ்கூலிலிருந்து வந்துள்ளார். எல்லா மணிரத்னம் படங்கள் போல இந்தப்படத்தில் தனா சார் எனக்கு மிக முக்கியமான ரோல் தந்துள்ளார். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது.., இந்த படம் பேரு தான் “ஹிட்லர்”, ஆனால் டைரக்டர் சாஃப்ட், ஹீரோ…
Read More
விஜய் ஆண்டனியின் ரத்தம் கவர்கிறதா?

விஜய் ஆண்டனியின் ரத்தம் கவர்கிறதா?

  தமிழ்ப்படம் புகழ் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம்.  இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பெரும் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். தமிழ்ப்படம் 1,2 என எடுத்து தமிழ்ப்படங்களை கலாய்த்து தள்ளிய அமுதன் ஃபுல் சீரியஸ் மோடில் எடுத்திருக்கும் திரைப்படம். பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் பத்திரிக்கையாளராக செழியன் இருக்கிறார். இவரை அடையாளம் தெரியாத இளைஞர் அவரது அலுவலகத்தில் அனைவர் கண்முன்னே ஒருவர் கொலை செய்கிறார். பின் விசாரித்ததில் தன்னுடைய தலைவரைப் பற்றி தவறாக செய்தி எழுதியிருந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்த இளைஞன் கூறுகிறார். ஒரு காலத்தில் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக இருந்து மனைவி இறப்பில் குடிகாரனாக மாறிய விஜய் ஆண்டனி அந்த…
Read More
விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா.…
Read More
விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் ! ஐந்து மொழிகளில் வெளியாகிறது!

விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் ! ஐந்து மொழிகளில் வெளியாகிறது!

  விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும்…
Read More