ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஆட்டம் – சைரன் !!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில்,
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிற படம் சைரன்.

ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், ஒரு போலீஸ் சைரனுக்கும் இடையில் நடக்கிற போராட்டம் தான் படத்தோட மையம்.

ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிற ஜெயம் ரவி, அவரோட பொண்டாட்டிய கொலை பண்ணிட்டதா, வில்லன்களால் குற்றம் சுமத்தப்பட்டு, ஜெயிலுக்கு போறாரு. தன்னுடைய கைக்குழந்தையை விட்டுட்டு ஜெயில்ல பல காலமாக இருக்கிற அவர், வயசான காலத்துல பரோல்ல திரும்ப வர்றாரு. அப்ப, தன்னுடைய மனைவியோட கொலைக்கு காரணமான வில்லன்கள வேட்டையாட ஆரம்பிக்கிறார். அந்த ஏரியால இன்ஸ்பெக்டராக இருக்கிற கீர்த்தி சுரேஷ் இவரை தடுக்க போராடுறாங்க. இதுதான் படத்தோட கதை.

தமிழ் சினிமால அடிச்சு துவச்சு போட்ட கதையினாலும், படத்தோட போரடிக்காத திரைக்கதையும். சரியான நடிகர்களை வைத்து, காமெடியை கொஞ்சம் கொஞ்சமா தூவி, ஒரு சரியான கமர்சியல் மசாலா கொடுக்க ட்ரை பண்ணி இருக்காங்க.

ஜெயம் ரவி இந்த படத்தோட ரோலுக்காக முழுக்க தன்னை மாத்திக்கிட்டு, இதுவரை திரையிலேயே வராத, ஒரு வயசான கேரக்டரில் நடிச்சிருக்கார். ஆரம்பத்துல பொண்ணோட பாசத்துக்காக ஏங்குறதும் ஒவ்வொரு கொலை பண்ற நேரத்துலயும், பலி வாங்குற உணர்வுகளை வெளிப்படுத்துவதும், ஒரு மத்திய வயதுல வலிகளோட வாழுற மனிதனோட உணர்வுகளை சிறப்பா பிரதிபலிச்சிருக்காரு. வழக்கமாக ஜெயம்ரவி படங்கள் குடும்பத்தோட பாக்குறதுக்கு ஏத்த படங்கள்ங்கிற பேர் இருக்கு. இந்த படத்தலையும் அதை காப்பாற்றி இருக்கார் ரவி.

படத்தோட பெரிய பிளஸ் படத்தோட திரைக்கதை, என்ன என்பதை தெளிவாக சொல்லிவிட்டு, அதுக்கு பின்னாடியே நூல் பிடிச்ச மாதிரி கிளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு போய் இருக்காங்க. பழைய கதைதான் ஆனால் கிளைமாக்ஸ் வரைக்கும் படம் போரடிக்காமல் போகுது. இது படத்துக்கு பெரிய பிளஸ்

கீர்த்தி சுரேஷ்க்கு இந்த படம் ஒரு லைஃப் டைம் ரோல் என்று சொல்லலாம். ஒரு போலீசா மிடுக்கோட ஜெயம்ரவியை எதிர்த்து நிற்கிற கேரக்டர். அதை கச்சிதமா பண்ணி இருக்காங்க. கொலைய அவங்க விசாரிக்கறதும், ஜெயம் ரவியை கண்டுபிடிக்கும் காட்சிகளும் நல்லா வந்திருக்கு. வில்லனா சமுத்திரக்கனி, அழகம் பெருமாள் கொடுத்த வேலையை சரியா செஞ்சிருக்காங்க.

ஜெயம் ரவி பொண்ணா வர்ற அந்த குழந்தையும் நல்லாவே நடிச்சிருக்காங்க.

படம் கொலை, கிரைம்,பாசம்னு போற இடத்துல, நம்மள படம் ஃபுல்லா சிரிக்க வைக்கிறது யோகி பாபு தான். கரெக்டான டைமிங்ல அவர் அடிக்கிற காமெடிகள், படம் ஃபுல்லா நம்மள சிரிக்க வைக்குது.

படத்தோட கேமரா செல்வகுமார், படத்தில் இருப்பதிலேயே பெஸ்ட் அவர்தான் சொல்லலாம், அப்புறமா படத்தோட மியூசிக் பாடல்கள் ஜிவி பிரகாஷ் குமாரும் பின்னணி இசையை சாம் சி எஸ் என ரெண்டு பேர் செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க ரெண்டு பேருமே மினிமமான வேலை பார்த்திருக்க மாதிரி தான் தெரியுது.

ஒரு பெரிய ஹீரோ வச்சு எப்படி அட்டகாசமா ஒரு கமர்சியல் படம் கொடுக்கிறதுனு முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார் பாக்கியராஜ். பொழுது போறதுக்கு சரியான கமர்சியல் மசாலா இந்த சைரன்