இயக்கம் – அட்லீ
நடிப்பு – ஷாருக்கான், நயன்தாரா
இசை – அனிருத் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – ரெட் சில்லிஸ்
அட்லியின் முதல் பாலிவுட் படம். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், வந்துள்ள படம். விஜய்க்கு செய்ததை, இப்போது ஷாருக்கானுக்கு செய்துள்ளார் அட்லீ.
கதை- ராணுவத்தில் முதுகில் குத்தப்பட்ட அப்பா, ஜெயிலில் பிறக்கு பிள்ளை, அங்கே ஜெயிலராகி அங்குள்ளவர்களுக்காக போராடுகிறார். இடையில் அவரை சிபிஐ போலீஸ் அதிகாரியான நயன் தாரா பிடிக்க போராடுகிறார். என்ன ஆனது என்பதே படம்.
கதையாக சொல்லவே முடியாது, 10 நிமிடத்திற்கு ஒரு முழு படத்தின் கதை வந்து போகிறது. படம் ஆரம்பிக்கு போது பரபரப்பாக இருக்கிறது. உண்மையில் இடைவேளை வரை நிறைய சர்ப்ரைஸ் தந்துள்ளார்கள் ஆனால் அதற்கப்புறம், தடுமாற ஆரம்பித்து விடுகிறது படம்.
80s, 90sல இந்திய படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ பல பேரை அடித்து நொறுக்கி கொண்டு இருப்பார், அப்போது ஒரு பெரிய உருவம் கொண்ட மனிதன் அந்த ஹீரோவை புரட்டி எடுப்பான் அவனுக்கு எங்கு அடித்தாலும் வலிக்குது அவன் மொத்த சக்தியும் தலையில் இருக்கும் ,ஹீரோ எப்படியோ அதை தெரிந்து கொண்டு தலையில் அடித்து அவனை வீழ்த்தி விடுவார். Zoom lens போட்டு உருவத்தை பெரிதாக காட்டி கைதட்டல் வாங்கினார்கள் கடைசியாக மாப்பிள்ளை ரஜினி படத்தில் இந்த மாதிரி ஒரு கிளைமாக்ஸ் காட்சியில் வந்தது அத்தோடு இது போன்ற உருவம் தமிழ் படங்களில் இருந்து மறைந்து போனது.
அதை மறுபடியும் ஜவான் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆரம்பம், சர்தார், பிகில், மெர்சல், kungfu hustle ஹாலிவுட் படம் என சீனுக்கு சீன் ஒரு படத்தின் காட்சி வந்து போகிறது.
தாய்நாடு படத்தில் சத்தியராஜ்க்கு ஏற்பட்டது போல ஒரு காட்சி, ஆரம்பம் படத்தில் அஜித்துக்கு அவரின் நண்பர் இழப்பு இது போன்ற கலவயை கலக்கி இருக்கிறார் அட்லீ. உயரத்தில் இருந்து வில்லன் சுட்டால் அந்த ஹீரோ தண்ணீர் இருக்கும் பகுதியில் தான் விழ வேண்டும் என்பது சினிமாவின் சாபம்.
முதல் பாதி பரவாயில்லை ஆனால் இரண்டாம் பகுதி முடியவில்லை காதில் எவ்வளவு தான் பூ சுற்றவது.
ஆனால் அட்லியிடம் ஒரு திறமை இருக்கிறது. படத்தின் எத்தனை லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், படத்தை பிரமாண்ட மேக்கிங்கில் சாதாரண ரசிகனை திருப்தி படுத்திவிடுகிறார்.
தமிழ் சினிமா நாயகர்கள் பேசிய அரசியல் வசனங்களை ஷாருக்கான் முதல் முறையாக பேசியிருக்கிறார். தைரியம் தான். என்ன நடக்கிறது பார்க்க்கலாம். பலவிதமான லுக் ஃபைட், ரொமான்ஸ் என அவரது ரசிகர்களுக்கு இந்தப்படம் விருந்து.
பெண்களை வைத்து ஆக்சன் சீன் அவர்களின் பின்கதை, ரயில் கடத்தல் என குட்டி குட்டி ஐடியாக்கள் சூப்பர். படத்தின் பின்பாதியில் ஆக்சன் காட்சி தவிர ரசிக்க ஒன்றும் இல்லை.
அனிருத் மொத்த படத்தையும் மாஸ் படமாக மாற்றியிருக்கிறார். கேமரா மாயஜாலம் நிகழ்த்தியிருக்கிறது.
தமிழில் செய்த அதே உப்புமாவை அட்லி பாலிவுட்டில் பிரமாண்டமாக கிண்டியிருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது சந்தோசம்.