கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் அமுதா ஆனந்த் தயாரிப்பில் ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் P. ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ லட்டு “- குணமாக சொல்லுங்க. இப்படத்தை இயக்குனர் சிகரம் K. பாலா சந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை , தமிழ் படம் 2.0 , தீரன் அதிகாரம் ஒன்று , காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர கேடி(A)கருப்பு துரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், பஞ்சராக்ஷரம் மற்றும் சூப்பர் டூப்பர் போன்ற படங்களில் வலுவான கதாபாத்திரமேற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன் , விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரட்டையர் இருவரை சிங்கள் பேரெண்ட்டான தந்தை ஒருவர் மட்டும் எப்படி வளர்க்கிறார் என்பதையும் அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் இப்படத்தின் கதை பேசும்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கி ஓக்கேனக்கல் , திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக தொடர்ந்து 35 நாட்கள் நடைபெறவுள்ளது.
இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் பை -லிங்குவல் படமாக வெளியாகவுள்ளது.
Related posts:
சாதிக் கொடுமையால் நடந்த ஆணவக்கொலை பற்றிய படம் ‘ குட்டி தேவதை’August 17, 2018
சுந்தர பாண்டியன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார்!March 12, 2018
"நாகேஷ் திரையரங்கம்” பாடல்கள் வெளியீடு!February 2, 2018
ஹீரோக்களை தேடும் சுசிகணெசன் !January 31, 2022
அதிரடியாக வெளியான Deadpool & Wolverine ட்ரைலர்!April 23, 2024