நானியின் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

நானியின் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் :) இது அற்புதமான காவியமாக…
Read More
விஜய் தேவரகொண்டா வின் ‘ VD 12’ படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

விஜய் தேவரகொண்டா வின் ‘ VD 12’ படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு தற்போது ' VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் நடைபெற்று வருகிறது. அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால்.. இந்த திரைப்படத்தை எதிர்வரும்…
Read More
இதுவரை 3.50 கோடி ரசிகர்கள் ஜவான் படத்தை பார்த்துள்ளனர் ! இந்தியாவில் இதுவே முதல்முறை !

இதுவரை 3.50 கோடி ரசிகர்கள் ஜவான் படத்தை பார்த்துள்ளனர் ! இந்தியாவில் இதுவே முதல்முறை !

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகிறது. ஜவான் படம் வெளியானதில் இருந்தே பல வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது, அந்த சாதனை மகுடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது, ஜவான் திரைப்படத்தினை இது வரை திரையரங்குகளில் 3.50 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2023-ல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இதுவாகும். ஜவான் வெளியானது முதலே திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகளாக நிரம்பி வழிகிறது. இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இப்படத்தை ஒருமுறை மட்டுமல்லாமல், பலமுறை படத்தை ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதனால் இன்று படம் திரையரங்குகளில் 3.50 டிக்கெட் விற்பனையைக் கடந்து சாதனை செய்துள்ளது. 2023ல் ஒரு இந்தியத் திரைப்படத்திற்கான அதிகபட்ச சாதனை இதுவாகும். ஜவான் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் இதயங்களிலும் தடுக்க முடியாத சக்தியாக இருப்பதையே இது காட்டுகிறது. “ஜவான்” திரைப்படத்தை…
Read More
இயக்குனர் ஷங்கரும் நடிகர் கமலஹாசனும் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர் !

இயக்குனர் ஷங்கரும் நடிகர் கமலஹாசனும் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர் !

இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களை இது வெகுவாக கவர்ந்தது. விபத்தால் நிறுத்தப்பட்டது: இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து…
Read More
1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜவான் !

1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜவான் !

  நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது முதலே, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் என்று தெளிவாக தெரிந்தது . பிரமாதமான ஓப்பனிங் மூலம் புயலாக நுழைந்து, இப்படம் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையுலக சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்தி திரையுலகில் இதுவரை நிகழாத சாதனையை ஜவான் படம் செய்துள்ளது. இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வெளியானது முதல் எந்த தடுமாற்றமும் இன்றி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 1103.27 கோடி வசூல் செய்து வரலாறு படைத்திருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடியை தாண்டிய முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் 733.37 கோடியாக உள்ளது, மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் 369.90 கோடி ஆகும்.…
Read More
இந்தியாவில் மட்டுமில்லை அரபு நாட்டிலும் சாதனை புரிந்துள்ள ஜவான்!

இந்தியாவில் மட்டுமில்லை அரபு நாட்டிலும் சாதனை புரிந்துள்ள ஜவான்!

நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான ஜவான் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிய நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் படத்தின் மீதான கிரேஸ் எந்த வகையிலும் குறையவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் படம் ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் தனது வலுவான முத்திரையை பதித்த ஜவான், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. இப்படம் மத்திய கிழக்கில் #1 இந்திய திரைப்படமாக வசூலில் சாதனை படைத்துள்ளது. சர்வதேச விநியோக சந்தையின் துணைத் தலைவர் நெல்சன் டிசோசா இது குறித்து கூறுகையில்.., ஜவான் சர்வதேச சந்தைகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மத்திய கிழக்கில் $16 மில்லியனைத் தாண்டிய முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இன்றுவரை வெளிநாடுகளில் 44.43 மில்லியன் வசூல் செய்து #1 இந்திய திரைப்படமாக வரலாற்று சாதனை…
Read More
ஷாருக்கானின் அசைக்க முடியாத இரண்டு மிக உயர்ந்த வசூல் சாதனைகள் !

ஷாருக்கானின் அசைக்க முடியாத இரண்டு மிக உயர்ந்த வசூல் சாதனைகள் !

  ஜவான் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600cr கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது. மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது ! இன்று, ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக வரலாற்று சாதனை புரிந்துள்ளது, இந்தியாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திரைத்துறையில் மீண்டும் பல சாதனைகளை முறியடித்து, திரைத்துறையில் சாதனைகளுக்கு புதிய வரையறைகளை அமைத்திருக்கிறார். ஷாருக்கான் நடிப்பில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட்டின் ஜவான், வரலாறு என்ற வார்த்தைக்கு அர்த்தமாக மாறியுள்ளது. செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது, மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளது. ஜவான் இந்தியில் 525.50 கோடிகளையும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம்…
Read More
ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி ரூபாய் வசூல் செய்த ஷாருக்கான்! ஜவானின் அடுத்த சாதனை!

ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி ரூபாய் வசூல் செய்த ஷாருக்கான்! ஜவானின் அடுத்த சாதனை!

  ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன். இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமிதத்தையும் அவர் பெற்றிருக்கிறார். ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை மறு வரையறை செய்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள…
Read More
வெளியான 13 நாட்களில் பிரம்மாண்டமான வசூல் சாதனையை செய்துள்ளது ஜவான்! அதற்குள் 1000 கோடியா!

வெளியான 13 நாட்களில் பிரம்மாண்டமான வசூல் சாதனையை செய்துள்ளது ஜவான்! அதற்குள் 1000 கோடியா!

  ஷாருக்கானின் 'ஜவான்' இந்தியாவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களிலும் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. ஷாருக்கான் தனது நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் பயணிக்கிறார். அத்துடன் அவரது நடிப்பில் வெளியான 'ஜவான்' திரையுலகில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கி பயணிக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் அபாரமாக வசூலித்து, 500 கோடி ரூபாய் கிளப்பில் பிரவேசித்திருக்கிறது. அத்துடன் உலகளவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதற்கு உத்வேகத்துடன் பயணிக்கிறது. 'ஜவான்' வெற்றியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த திரைப்படம் தென்னிந்திய திரையுலக சந்தையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றதாகும். இந்தத் திரைப்படம்150 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புத்தகத்தில் புதிய பக்கங்களை எழுதி, தென்னிந்திய திரையுலக சந்தையில் இதுவரை…
Read More
மிக வேகமாக அதிக வசூல் செய்த படம் என்ற மைல்கல்லை எட்டிய ஜவான்! இத்தனை கோடியா!

மிக வேகமாக அதிக வசூல் செய்த படம் என்ற மைல்கல்லை எட்டிய ஜவான்! இத்தனை கோடியா!

  ஜவான் என்ற தடுக்க முடியாத சக்தி- இந்திய பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தைகளையும் புயலாக தாக்கியுள்ளது. இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது! ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. படத்தின் உலகளாவிய ஈர்ப்பு மற்றும் எல்லை தாண்டிய பார்வையாளர்களை கவரும் திறனுக்கு இது ஒரு சான்றாகும். இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள SRK ரசிகர்களுக்கு, Jawan ஒரு சினிமா திருவிழா கொண்டாட்டமாக அமைந்தது. இந்தியாவில், மின்னல் வேகத்தில் 400 கோடியை வசூலித்தும், உலக அரங்கில், 11 நாட்களில் 800 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டியும் இதுவரையிலான திரையுலக வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. "ஜவான்"…
Read More