நெஞ்சில் துணிவிருந்தால் படம் குறித்து இயக்குநர் சுசீந்தரன் பேட்டி!

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள புதிய படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’ இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழாவில், டைரக்டர் சுசீந்திரன் கலந்து கொண்டு பேசிய போது, “நான் மகான் அல்ல படம் எப்படி வெற்றி படமாக அமைந்ததோ அதைப்போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ஆகியுள்ளன. இமானுடன் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சந்தீப் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருடன் நான், ‘ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ‘ஜீவா’ படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். தமிழில் விஷ்ணு விஷாலையும், தெலுங்கில் சந்தீப்பையும் வைத்து எடுக்க முடிவு செய்து, ஆரம்ப வேலைகளை தொடங்கினேன்.

2 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகுதான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து படம் எடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில காலத்துக்கு பிறகு பி மற்றும் சி சென்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகர் வசனத்தை சரியாக பேசி விடலாம். ஆனால், அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் உட்கார வைக்கிறார். சந்தீப் என்ற சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும்.”என்றார்

இந்நிலையில் வரும் 10 தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டைரக்டர் சுசீந்திரன், “நட்பு என்பது புரிதல் என்பதைச் சொல்ல வரும் படம் இது . ஆனால் இது வெறும் நட்பு பற்றிய படம் என்று சொல்ல முடியாது. . அதையும் தாண்டி ஒரு முக்கிய சமூக பிரச்னயை இந்தப் படம் பேசுகிறது . இதன் மூலம் சொல்ல வரும் ‘அந்த’ விஷயம்  வெகுஜன மக்களை கண்டிப்பாக கவரும். கூடவே இது ஒரு பக்க கமர்ஷியல் படமும் கூட .

அதாவது நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ, அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். இன்றைய ட்ரெண்டிங்கில் எச்சச்ச பாடலும் ரயில் ஆராரோ பாடலும் ஹிட் ஆகி உள்ளது. இமான் சாரோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அதே சமயம் யுவனோடு தொடர்ந்து ட்ராவல் பண்ண முடியாததற்கு வருந்துகிறேன். ஆனால் அதற்கு காரணம் நானில்லை என்பதை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

இப்படத்தின் சந்தீப் மிக நல்ல மனிதன் என்பது மட்டுமல்ல ; சிறந்த ஞாபக சக்தி கொண்டவர் . தமிழோ தெலுங்கோ எவ்வளவு பெரிய வசனம் என்றாலும், உடனே மனப்பாடம் செய்து சரியாகப் பேசி சிறப்பாக நடிப்பார். அதே நேரம் ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம்.ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவும் அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்குப் பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள பிரியப்படுகிறேன். தமிழான நீங்கள் ஏன் தெலுங்கு ஹீரோவை போட்டு படம் எடுக்கிறீர்கள் என்று ட்விட்டரில் சிலர் கேள்வி கேட்கிறார்கள். இந்த சந்தீப் இதே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான். அத்துடன் சினிமாவுக்கு மொழி கிடையாது என்பதை ஒவ்வொரு ரசிகரும் ஒப்புக் கொள்வார்கள்.

அதே போல ஆரம்பத்தில் என்னால் அறிமுகம் செய்யப்பட்ட விக்ராந்தும் இந்தப் படத்துக்குப் பிறகு மிக சிறப்பான இடத்தை அடைவார் . ரிலீஸ் போஸ்டரில் இவர் குறித்த தகவல் மற்றும் முகத்தை காட்டவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படி நம்மூர் பையனை பிரதானப்படுத்தினால் தெலுங்கில் இதன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால் அண்டர் பிளே செய்கிறேன்.

அப்புறம் இன்னிக்கு பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக்கும்மிகச் சிறந்த நடிகையான  மெஹ்ரீன் என் படத்திற்கு ஹீரோயினாக கிடைத்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனைக்கும். தமிழ் தெலுங்கு இரண்டுமே தெரியாத அந்தப் பெண் இரண்டு மொழிகளையும் சிறப்பாகப் பேசி நடித்திருகாங்க.. .

மேலும் நான் இயக்கிய பத்துப் படங்களில் ஏழு படத்தில் நடித்தவர் சூரி. இந்தப் படத்திலும் மிக முக்கியக் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் . இந்த சூரி என் குடும்ப உறுப்பினர் என்பதால் நான் எந்த கதை யோசித்தாலும் சூரி-க்கு எது பொருத்தமா? இருக்குமுன்னு யோசனையும் பலத்த டிஸ்கஷனும் வந்துடுது.. இந்த படத்துலே முழு ரோல் பண்ணி இருக்கார்

ஹைலைட்டா என்ன விஷயமுன்னா இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ரீசண்டா நீட் தேர்வால் இறந்து போன அனிதா நினைவுக்கு வருவார். இத்தனைக்கும் இது மாதிரியான சீனை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே யோசிச்சு தயார் பண்ணி இருந்தேன். நான் கற்பனையா எது நடக்கக் கூடாதுன்னு பிரியப்பட்டேனோ அது நடந்து முடிந்தது எனக்கும் ரொம்ப சோகம்.. மொத்தத்திலே தியேட்டருக்கு வந்து நெஞ்சில் துணிவிருந்தால் படம் பார்க்கிற எல்லோரையும் திருப்திபடுத்திப் படுத்தும் விதத்தில் இப்படம் தயாராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்றார்