சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் .
இதனிடையே படத்தின் ரன்டைம் விவரமும் வெளிவந்துள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும், அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது.