‘சின்னத்தம்பி’ திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளாகியுள்ளது. அதில் பிரபுவின் அப்பாவி நடிப்பா? இளையராஜாவின் இசையா? மனோரமா வின் தாய்ப்பாசமா? எதை பற்றியும் தனித்தனியாக பேசமுடியாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக அன்றைய தமிழக மக்களை பேச வைத்த படமிது. 9 தியேட்டர்களில் வருடக்கணக்கில் ஓடிய படம். 27 வருடங்கள் கடந்து இன்றைக்கும் இதே சின்னதம்பி என்ற பெயரை தமிழக மக்கள் உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தப் படம் குறித்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். அதில், “ ‘சின்னத்தம்பி’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாகி விட்டது என்பதை நம்ப முடியவே இல்லை. படம் வெளியாகி அந்த சமயத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. இந்தப் படம் வெளியான பிறகு என்மேல் நீங்கள் செலுத்திய அன்பை எப்போதும் மறக்க மாட்டேன்.அப்படீன்னு சொல்லி இருக்கார்
பி. வாசு வணிகரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் முதன் முதலாக பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். தான் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் பண்ணி இருந்தார். தற்போது இவர் லாரன்ஸ்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி வாறார். பி வாசு இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்குது, அதில் சின்னத்தம்பி திரைப்படம் இவரது வாழ்வில் ஒரு மைல்கல் என்று தான் சொல்ணும்.
1991ஆம் ஆண்டு எப்ரல் 12 ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பி வாசு எடுக்க உந்துதலாக ஒரு உண்மை சம்பவமும் எடுக்க ஒருமுறை பி வாசு படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது அங்கே ஒரு அரண் மனை வீடு இருந்துள்ளது அந்த அரண்மனையின் ராஜா படப்பிடிப்பை காண வந்திருக்கிறார். அப்போது அந்த அரண்மனையில் இருந்து ஜன்னல் வழியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டிச்சாம்.. உடனே அந்த ராஜா அந்த ஜன்னல் பக்கத்தில் சென்று ஏதோ சொல்ல அந்த பெண் வெளியில் வரவே இல்லை. பிறகு இது குறித்து அங்கிருந்தவர்களிடம் பி. வாசு பிறகு விசாரிச்சு இருக்கிறார். அப்போது வெளி ஆட்கள் அவர்கள் வெளி ஆட்கள் முன்பு ராஜா வீட்டுப் பெண்கள் யாரும் வர மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
அப்பாலே வேறு ஒரு இடத்திற்கு ஷூட்டிங்கிற்காக சென்றிருந்த போது அங்கே தனியாக ஒரு பாதை இருந்துச்சாம்.. இது குறித்து விசாரிக்கையில் ‘ராஜா வீட்டு பெண்கள் அனைவரும் இந்த வழியாகத்தான் கோயிலுக்கு செல்வார்கள். அவர்கள் வந்து சாமி கும்பிட்ட பின்னர் தான் மற்றவர்கள் செல்வார்கள்.. என்று சேதி சொல்லிவிட்டு கும்பிட்டவும் சொன்னாய்ங்களாம்.
இதை எல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்ட விவாசு பின்னர் இதை மையமாக வைத்து தான் சின்னத்தம்பி படத்தை இயக்கியிருக்கிறார். அதேபோல நடிகன் படத்தில் ஒரு காட்சியில் குஷ்பூ சேலை அணிந்து அடக்க ஒடுக்க மாக வரும் ஒரு காட்சியை பார்த்த பின்பு தான் குஷ்பூ தான் சின்னத் தம்பியின் நாயகி என்று முடிவெடுத்தார் பி வாசு.ஆனால், குஷ்பு இருக்கு அப்போது தமிழ் சரியாக வராது என்பதாலும், குஷ்பூ, பிரபு ஜோடியாக நடிக்க உடன்பாடு இல்லை என்பதாலும் தயாரிப்பாளர்கள் குஷ்பூ இந்த படத்தில் என்பதாலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் பி வாசு குஷ்பூ நடிக்கவில்லை என்றால் இந்த படத்தையே நான் எடுக்க மாட்டேன் -ன்னு சொல்லி புட்டார் ஆனால் பி வாசு நினைத்ததை போலவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் குஷ்புதான்.
இந்த படத்தில் இடம் பெற்ற அரைச்ச சந்தனம் பாடலில் வரும் குஷ்புவை மட்டும் காண தினமும் ரசிகர்கள் வந்து போனாய்ங்க அதே போல இந்த படத்திற்கு பின்குஷ்புவிற்க்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருந்தாய்ங்க. இந்த படம் வெளியான பின்னர் தான் குஷ்புவிற்கு கோயில் கட்டினாய்ங்க. அதே போல ஞாயிற்றுக்கிழமை குஷ்பூவை பார்ப்பதற்கா கவே பேருந்துகளில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் வந்து சென்றாய்ங்க. மேலும், இந்த சின்ன தம்பி படத்தை பார்த்துவிட்டு புஷ்புவிற்கு ரசிகர் ஒருவர் திருமணம் செய்தால் உங்களைத்தான் திருமணம் செய்வேன் என்று ரத்தத்தில் கூட கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
இன்றளவும் தன் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க பிரபு பாடிய தூரியிலே பாடலை தான் தாய் மார்கள் விரும்பி போட்டு தூங்க வைக்கின்றனர். இப்படி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கும் பட்சத்தில் அவர் கேட்டதும் சரியாக 35 நிமிஷத்தில் அந்த 5 பாடல்களுக்கும் மெட்டுக்களை போட்டு விட்டாராம் இளையராஜா. இப்படத்து ராஜா இசைக் குறித்து நம் கட்டிங் கண்ணையாவிடம் பேசிய பி.வாசு, “
*சின்னத்தம்பி படத்தின் பின்னணி இசை பணிகள் நடந்துகொண்டிருந்தது. படத்தின் மிக முக்கியமான காட்சி அது. குஷ்புவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட அந்த மகிழ்ச்சியில் ராதாரவி பிரபுவை பாடச் சொல்ல, ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் குஷ்புவுக்கு தாலிகட்டியிருக்கும் பிரபு தன் மனைவியின் திருமணத்திற்காகவே தன்னை பாட சொல்கிற நிலையை எண்ணி வருந்தி ”குயில புடிச்சி கூண்டிலடிச்சி கூவ சொல்லுகிற உலகம்” என்று பாடுவார்.
அந்த பாடல் முடிந்ததும் குஷ்பு தன்னிலை மறந்து அனைவரின் முன்பாகவும் அழுதபடி ஓடிவந்து பிரபுவை கட்டிப்பிடித்து முத்தமிடுவார். அதற்கு அடுத்ததாக குஷ்புவை ராதாரவி அறைவார். அப்போது கீழே விழும் குஷ்புவின் தாலி வெளியே வந்து விழுகிறது. ஏற்கனவே தாலி கட்டிக் கொண்டிருக்கும் குஷ்புவை பார்த்து அனைவரும் உறைந்துபோய் நிற்கின்றனர். இதுதான் அந்த காட்சி. இந்த காட்சிக்கு எப்படியெல்லாம் இசையமைப்பாரோ என எதிர்பாத்திருந்த எனக்கு, ஒரு சிறிய சத்தத்தோடு நிறுத்தி பின்னணி இசையே இல்லாமல் வெற்றிடமாக வைத்துவிட்ட இளையராஜாவின் செயல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
”அண்ணே படத்தோட முக்கியமான இடமே இதுதான். இதுல போய் இப்படி இசையே இல்லாம அமைதியா விட்டுட்டீங்களே” என்று கேட்டேன். அதற்கு இளையராஜா,”யோவ்.. உன் வேலையை நீ பாரு, என் வேலையை என்னை பாக்கவிடுய்யா” என்றார். அவர் பின்னாடியே சென்றேன். அவர் அதை மாற்றுவதாக இல்லை. இரவு தூக்கமில்லை. படம் அவ்வளவுதானா என்ற பயம் வர ஆரம்பித்தது. மீண்டும் இளையராஜாவிடம் பேசினேன். அவர்,”அந்த எடத்துல வேற எதையும் நீயா வச்சிடாதயா..” என்றார்.
படம் வெளியானது. திரையரங்கு சென்று படம் பார்த்தேன். அந்த குறிப்பிட்ட காட்சி வந்தது. குஷ்பு கீழே விழ தாலி வெளியே வந்து விழுந்தது. திரை அரங்கு முழுவதும் உச் உச் உச் என்ற சத்தம் எழுந்தது. அந்த வெற்றிடத்துக் கான வலிமையை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். இளையராஜாவை பார்க்க சென்றேன். ”என்னய்யா.. தியேட்டர்ல உச் உச் னு சத்தம் கேட்டுச்சா?” என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. எந்த இடத்தில் எப்படி இசையமைக்க வேண்டும் என்று மட்டுமல்ல, எந்த இடத்தில் இசையமைக்கக்கூடாது என்றும் இளையராஜாவுக்குதான் தெரியும்” அப்படீன்னார் ராஜா
இந்த திரைப்படம் 9 திரையரங்குகளில் 356 நாட்கள் ஓடி சாதனை படைச்சுது. அது மட்டுமல்லாது நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்த பிரபு மற்றும் இந்த ஆகிய இருவருக்கும் இந்த படத்திற்கு பின்னர் இப்படி ஒரு வெற்றி இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளை கடந்து இருக்குது
ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிச்ச சின்னத்தம்பி படத்திற்காக நடிகர் பிரபு ரூ. 11 லட்சம் சம்பளமும், நடிகை குஷ்பூ ரூ. 4 லட்சம் சம்பளமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானதெல்லாம் தனிக் கதை… இன்றைக்கும் கோடம்பாக்க ஸ்டோரி டிஸ்கஷன்களில் லாஜிக் குறித்த விவாதம் வரும்போது அங்கு ரெஃபரன்ஸுக்கு வரும் முதல்படம் ‘சின்னத்தம்பி’தான். அந்த அளவுக்கு லாஜிக் இல்லா மேஜிக் படைத்த ‘சின்னதம்பி’ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் வாழ்வில் இருந்து அழியாது.