குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!

குஷ்புவுக்கு கோயில் கட்ட காரணமாக இருந்த “ சின்ன தம்பி” ரிலீஸ் டே!

‘சின்னத்தம்பி’ திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகளாகியுள்ளது. அதில் பிரபுவின் அப்பாவி நடிப்பா? இளையராஜாவின் இசையா? மனோரமா வின் தாய்ப்பாசமா? எதை பற்றியும் தனித்தனியாக பேசமுடியாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக அன்றைய தமிழக மக்களை பேச வைத்த படமிது. 9 தியேட்டர்களில் வருடக்கணக்கில் ஓடிய படம். 27 வருடங்கள் கடந்து இன்றைக்கும் இதே சின்னதம்பி என்ற பெயரை தமிழக மக்கள் உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் படம் குறித்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். அதில், “ 'சின்னத்தம்பி’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாகி விட்டது என்பதை நம்ப முடியவே இல்லை. படம் வெளியாகி அந்த சமயத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. இந்தப் படம் வெளியான பிறகு என்மேல் நீங்கள் செலுத்திய அன்பை எப்போதும் மறக்க…
Read More