ஒரே சமயத்தில் வெளியாகவுள்ள இரண்டு கமல் படங்கள்! ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்து!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

தற்போது இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்தில் தான் வெளியாகும் என அறிவிப்புகள் வருகின்றன. தற்போது இந்தியன் 2 திரைப்படம் சென்னை ஏர்போட்டில் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து விறுவிறுப்பாக மீதமுள்ள காட்சிகளை படமாக்கிவிட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பொங்கலுக்கு இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் ஒரே தினத்தில் கமல் நடித்த இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அதாவது பிரபாஸின் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K படத்தில் உலகநாயகன் கமல் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதில் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றது.

Indian 2 - IMDb

மேலும் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்படமும் இந்தியன் 2 படமும் ஒரே தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இவ்வாறு உலகநாயகனின் இரண்டு திரைப்படம் ஒரே சமயத்தில் வெளியானால் அது அவரின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்று பேசிக்கிறாய்ங்க