ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

இது ஏழாண்டுக்களுக்கு முந்தைய சேதி

தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் செயலாளர் A. ஜான் பேசும் போது” என் ஆயுளில் முதல்பாதியை நான் பிறந்த ஊரிலும் மறு பாதியை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்களுடன்தான் கழித்திருக்கிறேன். நண்பர்கள் இந்த செயலாளர் பொறுப்பை முள்கீரீடம் என்றார்கள். அதைத் தெரிந்தே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மூத்தவர்கள் முன்னோடிகள் வழிகாட்டுதல்களுடன் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன்.” என்றார்.

மேலும் செயலாளர் A.ஜான் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவனத்தில் உதவி கோரினார்.
அதை அடுத்து வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ,ஆண்டு தோறும்10 இலவச இடங்கள் தருவதாக அடுத்த சில நிமிடங்களில் அறிவித்தார். (அதன்படி இன்று வரை ஐசரிகணேஷ் காலேஜ்களில் பீ ஆர் ஓ-கள் சிபாரிசு கடிதத்துடன் வரும் 10 மாணக்கர்களுக்கு ஒதுக்கீடு நடக்கிறது)

இது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்குழு மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையின்படி இனிமேல் பத்திரிகையாளர் காட்சி உள்பட எந்தவொரு சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் அதேபோல் எந்தவொரு சினிமா விழாக்களின் இடைவேளையின்போது தேனீர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விமர்சனம் என்ற பெயரில் நடிகர், நடிகைகளை தனிநபர் தாக்குதல் செய்யும் நபர்களை எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது என்றும், அதுமட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் தயாரிப்பாளர்களின் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆனால் இன்றுவரை இந்த செலவீனங்கள் குறையவில்லை)

இது கடந்த இரண்டாட்டுக்கு முந்திய சேதி:

பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள் இன்று 11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்து சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அளித்தனர். அதில் தங்களுக்கு அரசு அங்கீகார அட்டை அட்டை (அக்ரிடியேஷன் கார்ட்) வேண்டுமென்பது முக்கியம். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர் அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

முன்னதாக கடந்தவெள்ளியன்று தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், பொருளாளர் இரா.குமரேசன் ஆகியோரைச் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மு.பெ சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக இப்படி ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்? சினிமாவுக்கும் இவிய்களுக்கும் என்ன தொடர்பு? இவிய்ங்களால் சினிமாவுக்கு என்ன பிரயோஜனம்? நிஜமாகவே இவிய்ங்களுக்கு பத்திரிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படீங்கற மிக நீண்ட ரியல் ரிப்போர்ட் நாளை நம்ம https://cinemapressclub.com/ .. ல்