M10 PRODUCTION” சார்பில் M.S.முருகராஜ் தயாரித்து வரும் படம் “பக்ரீத்”. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
டி இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார். திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராகவும், மதன் கலை இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் பக்ரீத் வெளியாக இருக்கிறது.
Related posts:
'இசையராஜா 75' பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் ஜரூர்!December 16, 2018
‘6 அத்தியாயம்’ இயக்குனரின் அடுத்த த்ரில்லர் ‘என் பெயர் ஆனந்தன்’..!February 26, 2018
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!August 14, 2018
வா.. வேலைக்காரா பாடலில் என்ன ஸ்பெஷல்?December 13, 2017
விஜய் ஆண்டனி - சத்யராஜ் - ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் "காக்கி"March 4, 2019