குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்,

0
228

 

இயக்குனர் – பிருந்தா மாஸ்டர்
நடிகர்கள்- ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், அனஸ்வர ராஜன் , முணிஸ்காந்த்
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – ரியா ஷிபு

தமிழில் பல படங்களில் நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்குநராக பணிபுரியும் இரண்டாவது படம் தான் “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” துல்கர் சல்மானை வைத்து ‘ஏ சினாமிகா’ என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படத்திலேயே வெற்றியடைந்த பிருந்தா மாஸ்டர் அடுத்ததாக இந்த படத்தை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒருவர் தன் காதலியை காப்பாற்றுவதற்காக ஒரு கொலை செய்து பல ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு குமரி மாவட்டத்தின் சிறையில் அடைக்கப்படுகிரார், அங்கிருந்து தப்பித்து தன் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறான், அங்கு அவன் சிறையில் சந்திக்கும் சில கைதிகளையும் சேர்த்துக் கொண்டு தப்பிக்க திட்டம் தீட்டுகிறான், இறுதியில் அவன் தப்பிதானா இல்லை மாட்டிக் கொண்டானா என்பதே இந்த படத்தின் சுருக்க கதை.

இந்த கதை தமிழ் சினிமாவில் புதிதானது அல்ல எனினும் படத்தின் திரைக்கதை மற்றும் மேகிங் நாம் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது , இந்தப் படத்தின் டெக்னிக்கல் குழு தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர் குறிப்பாக சாம் சி எஸ் இசை படத்திற்கு பெரிதும் பக்க பலமாக அமைந்துள்ளது,

ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த கதையை பரபரப்பான திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர், படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகள் முடிந்த பின்னரும் ஒவ்வொருவரின் பின்னணி கதைகளை கூறி திரைக்கதையை சுவாரஸ்யமாக கையாண்டுள்ளார், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஹிருது ஹாரூன் ஒரு இளம் வயது வாலிபனாக கண்களில் கோபத்துடன், ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக சாலையில் ஆட்டோவில் ஒருவரை துரத்தி அடிக்கும் காட்சியில் லைவாக இருந்தது நிறைய மெனக்கெடல் போட்டுள்ளார் என்பது அதிலிருந்தே தெரிகிறது, ஆர்கே சுரேஷ் ஒரு சிறை அதிகாரியாகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். மறுபுறம் பாபி சிம்ஹா தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அவரின் எண்ட்ரி காட்சிகள் மாஸாக இருந்தது , முனீஸ் காந்த் வழக்கம் போல் தனது குணச்சித்திர நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், கதாநாயகி அனஸ்வரா ராஜன் மிகவும் அழகாக நடித்துள்ளார்,
எனினும் இந்த படத்தில் அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறு செய்து விடுகின்றனர், அதனால் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர் இதை கொஞ்சம் மாருதலாக சொல்லி இருக்கலாம்

Image

மொத்தத்தில் இப்படம் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் நம்மை படம் முழுக்க எங்குமே போர் அடிக்க விடாமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்தி சென்றிருக்கின்றனர், ஆக்சன் கலந்த திரில்லர் படமாக “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” படம் உருவாகியுள்ளது,