நாய் சேகர் கேரக்டரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவிற்கு இந்த படம் சிறப்பானதாக அமைந்ததா என்று பார்க்கலாம். நாய் கடத்தல்காரன் என்ற கதாபத்திரத்தில், தனது கேங்க் ஓடு வரும் வடிவேலுவின் அதகளத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால், ஆனந்தராஜின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது.
மேலும் வடிவேல், ஆனந்த்ராஜ் இருவரின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தவிர படத்தில் ஈர்க்கும் படி எதுவும் இல்லை. இப்படத்தில் ஷிவானி நாராயணன் வில்லன் மேக்ஸின் சகோதரியாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் தான் வருகிறார். ஷிவானியின் நடிப்பு பாராட்டுக்குரியது.
படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இயக்குனர் கதைக்களத்தில் தொலைந்துவிட்டார். பின்னணி இசை படத்துக்குக் கைகொடுக்கிறது. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. ஆனால், படம் தான் வடிவேலு நினைத்தபடி ஆடியன்ஸ் மனதில் ஒன்றவில்லை. படத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகள் மட்டுமே உள்ளன, மற்றபடி ஆர்வத்தை ஏற்ற கூடிய காட்சிகளோ, வடிவேலுவிடம் எதிர்பார்க்கும் நகைச்சுவையோ இல்லை. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு சுமாரான படம்.
படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. இது ஆடியன்ஸ்-ன் பொறுமையை சோதிக்கிறது. படத்தில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. நகைச்சுவைகளும் சிறப்பாக அமைக்கப்படவில்லை.
மொத்தத்தில் வடிவேலுவின் நாய் சேகர் – ஏமாற்றம் தான்