அயலி தொடர் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமாக நிகழ்ந்திருக்கிறது

தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமாக நிகழ்ந்திருக்கிறது அயலி இணையத்தொடர்.
ஜீ 5 தமிழில் ஜனவரி 26 வெளியாகியுள்ள என்ற வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வழக்கமான ஹாரர் திரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு சமூகத்தின் கதையை நெஞ்சில் இறங்கும் ஈட்டியாக அடித்து சொல்லியிருக்கிறது அயலி

வீரப்பன்னை கிராமத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள், பெண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பின்பற்றப்படும் நடைமுறைகளையும் சுற்றி இந்தக்கதை சுழல்கிறது. இந்த நடைமுறையை  கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, தான் பருவமடைந்ததை மறைக்கிறாள். ஒரு இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறாள்.

நம் சமூகத்தில் இது போன்ற பெண்ணடிமைத்தனம் அங்கங்கே இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அதை ஒரு அழகான திரைக்கதைக்குள் அடக்கி அனைவருக்கும் சேரும் வண்ணம் தந்துள்ளது அயலி குழு.

ஒரு கிரமாத்த்திற்குள் சென்று நாம் வாழும் உணர்வை தந்திருக்கிறார்கள். ஊர் அமைப்பு, பழக்கவழக்கம் 90 களின் காலம் அயலி அம்மன் கோவில் என அனைத்து அத்தனை தத்ரூபம்.

படத்தில் வரும் அத்தனை பெண்களுக்கும் தனியாக ஒரு சபாஷ் போடலாம். நம் கிராமத்து பெண்களை கண்முன் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள் கதையின் நாயகியாக வருகிறார் அபிநயஸ்ரீ அற்புதம். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது கேரக்டர்களை உணர்ந்து அக்கதாபாத்திரமாகவே மாறி தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, லவ்லின், காயத்ரி, தாரா அத்தனை பேரும் அப்ளாஷ் வாங்குகிறார்கள்.

இன்னமும் பல கிராமங்களில் நடந்து வரும் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை திணிக்காமல் அழகாக வைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் முத்துகுமார். ரெவா இசை படத்திற்கு பலமாக அமைந்ததுடன் நம்மையும் கிராமத்திற்கு கூட்டி செல்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகியலை கண்முன்னே கொண்டுவந்து காட்டியிருக்கிறது.

சமூகத்திற்கு தேவையான அவசியமான படைப்பு அயலி அது அனைவரும் ரசிக்கும் படு அமைந்திருப்பது அழகு.