17
Apr
ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ! “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !! தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். பள்ளியிலிருந்து திடீரென காணாமல் போகும் தாரா, பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். தாராவின் மரணத்தால் உடைந்து போகும் வியாம் தன் நண்பர்களின் உதவியுடன் அவளுக்கு என்ன…