இயக்கம் – சர்ஜூன்
திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ்
கதை – துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் உதவிக்காக கதறி அழ, அந்த அழுகுரல் ஒருதொலைக்காட்சியில் வேலைக்குபுதிதாக இணையும் நியூஸ்புரோகிராமருக்கு எட்டுகிறது அவர்அவர்களைகாப்பாற்ற முயற்சி எடுக்க அதில் ஜெயித்தாரா என்பதே கதை.
ஒரு நியூஸ் சேனலின் பின்னணியில் நிகழும் எளிய மனிதர்களுக்கான நீதி தேடிய பயணம் தான் கதைகரு. படம் ஆரம்பித்தவுடன் நம்மை உள் இழுத்து கொள்வதற்கான அத்தனை அம்சங்களும் படத்தின் கதையிலேயே இருப்பது நன்று. படம் ஆரம்பித்தவுடன் எந்த தேவையில்லாத காட்சிகளும் இல்லாமல் கதைக்குள் நுழைவதும் படம் முடியும் வரையிலும் எந்த பிசிறும் இல்லாமலும் கதை பயணிப்பதும் அழகு.
ஓடிடி தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது, திரையரங்கிற்குகான மசாலாக்கள் இல்லாமல் நேரடி கதை சொல்லலில் படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது, அந்த வரிசையில் வந்திருக்கும் படம். படம் வெறும் 1.30 மணி நேரம் மட்டுமே, எந்த மசாலாத்தனம் இல்லை, இது எல்லாம் நல்ல விசயம் ஆனால் இதை தமிழ் சினிமா எப்படி பயன்படுத்திக்கொள்கிறது என்பது தான் முக்கியம்
இந்தப்படத்தில் துபாயில் வேலை பார்ப்பவர்களின் நிலையை சொல்லியிருப்பதும், அங்கு சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் வலியை பதிவு செய்திருப்பது உண்மையில் பாராட்டக்கூடியது. மேலும் படத்தில் முக்கிய அம்சமாக பாதிக்கப்படும் தமிழர்களுக்கு, குரல் கொடுக்க இங்கு ஆளிருக்கிறது சொந்தம் இருக்கிறது, ஆனால் இறந்து போன ஒரு இலங்கை பெண்ணின் உறவல்ல ஊரையே காணவில்லை எனபது எத்தனை பெரிய வலி ஆனால் படத்தில் ஒரு படத்தில் வந்து போனாலும் உண்மையில் அழுத்தமான பதிவே.
ஒரு அழுத்தமான கதை ஏற்கனவே க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வந்த கதை தான், அதன் மற்றொரு கோணமாக படம் உருவாகியிருக்கிறது. பிரியா பவானி சங்கர் ரிப்போர்ட்டர் புதிதாக வேலைக்கு சேர்பவர். துபாய் பிரச்சனையை தீர்ப்பது மாதிரியான பூசுற்றலை கொஞ்சும் நம்பும்படியாக மாற்ற முயன்றிருக்கிறார்கள், பிரியா பவானி சங்கர் தனது பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குவைத்தில் குற்றத்திற்கு பரிகாரமாக ப்ளட்மணி கொடுத்தால் மரண தண்டனை இல்லை எனும் விவரங்கள் எல்லாம் புதுசு, அதே போல் அவர்கள் தரும் பல விவரங்கள் படத்தின் ஆர்வத்தை கூட்டுகிறது.
இனி படத்தின் குறைகள் பார்க்கலாம் இப்படம் ஆரம்ப கணத்திலிருந்தே சோகமாக தான் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஓடிடிக்கு என எடுக்கப்பட்டதால், படம் சினிமாவுக்கான எந்த பூச்சுக்களும் இல்லாதது சிறப்பு என்றாலும் மற்றோரு பக்கம் அது நாடகதன்மையை கொண்டு வந்து விடுகிறது.
படம் முழுக்கவே மேக்கிங் ஒரு குறும்பட மேக்கிங் போலவே இருக்கிறது. கேமரா அசையாத க்ளோசப் கோணங்கள், ஒத்து வராத சோக இசை,எந்த சுவார்ஸ்யமின்றி நகரும் காட்சிகள் படத்தின் பலவீனம்.
மற்றபடி இது ஓடிடிக்கேற்ற சரியான சினிமா.