ஓ மை கடவுளே – விமர்சனம்!

டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து — இன்று சர்வ சாதாரணமாக சகல தரப்பினரும் சொல்லும் ஒரு வார்த்தையாக, விஷயமாக ஆகி விட்டது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1960 களில் ஜஸ்ட் 0.002% ஆக இருந்த டைவோர்ஸ் அப்ளிகேசன், 1980- ல் 0.03% ஆகி ,1990 -ல் 0.1% ஆகி, 2007 -ல் 1% ஆகி, 2017ல் 7% ஆனது 2019ல் அதனிலிருந்து புள்ளி 4% அதிகரித்துள்ளது..

இச்சூழலில் குடும்ப உறவுகளை பெருமைப்படுத்தி கதை சொல்லி வந்த வெள்ளித் திரை இப்போது ட்ராக் மாறி போய் கொண்டிருக்கிறது. கூடவே வீட்டு மெம்பர்களில் ஒன்றாகி விட்ட வெள்ளித் திரை என்னும் டி வி- சேனல்கள் இந்த டைவோர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்துக் கொண்டிருக்கிறது.

இப்படியாப்பட்ட காலக் கட்டத்தில் நட்பு, காதல், கல்யாணம், குடும்பம் மற்றும் கடவுள் என்பது போன்ற வாழ்வியல் சமாச்சாரங்களைக் கொண்டு ‘ஓ மை கடவுளே’ என்ற பெயரில் 2K ஜெனரேசனுக்காகவே வழங்கி அசத்தி இருக்கிறார்கள்,

.பால்யகாலம் தொட்டு அஷோக்செல்வன் ரித்திகா சிங் ஜஸ்ட் ப்ரண்ட்-டாக இருக்கிறார்கள் ஒருநாள் அந்த ஃப்ரண்டிடம் ’நீ என்னை மேரேஜ் பண்ணிகறையா? என்று கேட்க அஷோக்கும் சில விநாடிகள் கூட யோசிக்காமல் சரி என்கிறார். ஆனால் கல்யாணம் ஆன பிறகு லைப் எதிர்பார்த்தது போல அமையவில்லை. ஃப்ரண்டாக் தொட்டு, பழகிய ரித்திகாவை ரொமான்ஸாக லுக் கூட விட முடியாமல் அவஸ்தைப் படும் சூழலில் தன் பள்ளியின் இன்னொரு தோழியைக் கண்டு மனம் மலர்கிறான். இது பிடிக்காத ரித்திகா அஷோக்-கைக் கண்டிக்க சர்ச்சை முற்றி டைவோர்ஸ் செய்ய முடிவெடுக்கின்றனர். அச்சூழலில் திடீரென கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பு அசோக் செல்வனுக் குக் கிடைக்கிறது. தனக்கு ஏன் டைவோர்ஸ் தேவை என்று விவரிக்கும் அவருக்கு, இந்த மேரேஜ் முடிவையே மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு (டிக்கெட்) தருகின்றார் கடவுளாகப்பட்ட விஜய் சேதுபதி. அதன் விளைவு என்ன என்பதுதான் கதை..

இந்த 2k யைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பேமிலியின் பின்னணியில் நட்பு, காதல், வாழ்க்கை, ஆசா பாசம், சபலம், யதார்த்தம் என ஒரு காக்டெயில் ட்ரீட் -டாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வத். கேஷூவலான வசனங்கள், ஊபர் ட்ரைவருடனான பய்ணம் உள்ளிட்ட ஒவ்வொரு காட்சிகளுக்குமான தொடர்பு என கடவுள் போடும் முடிச்சை ரொம்ப புத்திசாலித்தனமாக காட்டி அப்ளாச் வாங்குகிறார்.

நாயகன் அஷோக்செல்வன் நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார். தக்கனூண்டு வயசிலிருந்து ஒட்டி, உறவாடிய ஒரு ஜீவன் ஒரு பெண் என்று கூட நினைக்காமல் பழகி விட்டு மனைவியாகி விட்ட அவளுக்கு முத்தம் கொடுக்கக் கூட தடுமாறும் அர்ஜுன் ரோலில் நடித்திருக்கும் அசோக் செல்வன் இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்திருக்கிருக்கலாம்.

ரித்திகா சிங் – கொஞ்சம் வசதியான் வீட்டு பெண்ணாக வளர்ந்து யாரோ முகம் தெரியாதவனை கல்யாணம் செய்ய தயங்கி பால்ய சிநேகிதனையே கணவனா வந்த நிலையில் ஏக்கப் பார்வையுடன்,‘எதையும் ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். அதுவா நடக்கும் போது பார்த்துக்கலாம்’ அப்படீன்ன்னு சொல்லும் போதே உயர்ந்து விடுகிறார்.

வாணி போஜன் தனி ஸ்கோர் செய்திருக்கிறார். இதுதான் முதல் படமாம். இனி அடிக்கடி இவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் ஷா ரா & கடவுள் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் இயல்பான நடிப்பை வழங்கி படத்தை ஒன்றிப் பார்க்க உதவுகிறார்கள்

லியோன் ஜேம்ஸ் பின்னணி இசை அளவுக்கு பாடல்களுக்கு மெனக்கெடவில்லை. ஆனாலும் விது அய்யண்ணா ஒளிப்பதிவால் கடவுளை தாண்டி கவனம் போகவில்லை..

ஓட்டலுக்கு சாப்பிட போனால் தனக்கு என்ன தேவை என்பதை விட எதை அதிகம் பேர் கேட்டு விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கண்டறியும் மன்சை மையமாக வைத்து புதுசான தினுசில் திரைக் கதையை கொண்டு போயிருக்கிறார் டைரக்டர். இவரின் முதல் படம் இன்னும் ரிலீஸாக நிலையில் இரண்டாவது படம் பண்ணச் சான்ஸ் கிடைத்து அதன் இரண்டாம் பாதியில் அப்ளாஸ் வாங்கும் விதத்தில் படம் கொடுத்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்..

மொத்தத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி கலப்படமற்ற அன்பை மட்டுமே அப்பட்டமாக சொல்லி இருக்கும் படமிது