வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிர்களை ஈர்த்த பரோல்!

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “பரோல்” தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

தொடர் குற்றங்கள் மூலம் குற்றவாளியாக சிறைவாசம் அனுபவிக்கும் அண்ணன், அண்ணன் மீது துளியும் ஈர்ப்பு இல்லாமல் கோபத்தில் இருக்கும் தம்பி என இரண்டு கதாபத்திரங்களின் வாழ்கை தான் கதை . இவ்விருவரின் தாய் இறக்க, அவர்களுடைய இறுதி சடங்கிற்கு அண்ணன் வர வேண்டும் என சுற்றி இருந்தோர் கூற, அதற்காக தனக்கு பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பரோல்-க்கு முயற்சிக்கும் தம்பி. அதனால் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை வித்தியாசமான கதையமைப்பின் மூலம் கூற வருகிறது ‘பரோல்’ திரைப்படம்.

படத்தில் அண்ணன் தம்பியாக லிங்கா- கார்த்திக்யை தேர்ந்தெடுத்தது, முதல் பலம். இருவரும் அண்ணன் தம்பியாக பக்கவாக பொருந்துகிறார்கள். சிறிய கதையாக இருந்தாலும், வித்தியாசமான கதையை தேர்வு செய்து, அதற்கு நல்ல திரைக்கதை அமைத்து நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் அமைத்திருக்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நேர்த்தியாகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருப்பது தான் படத்தின் சிறப்பு. சின்ன சின்ன காட்சிகளில் கூட முக பாவனைகள் மூலமாக நடிகர்கள் கதைக்கு உயிரோட்டம் கொடுக்க முயற்சித்து மெனகெட்டுஇருக்கிறார்கள். அது யதார்த்தமாகவும் அமைந்து கவனத்தை ஈர்க்கிறது.

இருவித ஆட்களின் பார்வையில் இருந்து கதை நகரும் யுக்தி, நான் லீனியர் ஸ்கீரீன் பிளே, டிவிஸ்டுகள் என சுவாராஷ்யமான அம்சங்க நிறைந்து, ரசிகர்களை கட்டிபோடும் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறது. இது தான் இந்த படத்தின் சிறப்பம்சம்.

ஒரு நேர்மையான திரில்லர் படம். ரசிகர்களுக்கு நேர்மையான படத்தை கொடுக்க வேண்டும் என்று படக்குழு முயற்சித்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.