13
Nov
TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “பரோல்” தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். தொடர் குற்றங்கள் மூலம் குற்றவாளியாக சிறைவாசம் அனுபவிக்கும் அண்ணன், அண்ணன் மீது துளியும் ஈர்ப்பு இல்லாமல் கோபத்தில் இருக்கும் தம்பி என இரண்டு கதாபத்திரங்களின் வாழ்கை தான் கதை . இவ்விருவரின் தாய் இறக்க, அவர்களுடைய இறுதி சடங்கிற்கு அண்ணன் வர வேண்டும் என சுற்றி இருந்தோர் கூற, அதற்காக தனக்கு பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பரோல்-க்கு முயற்சிக்கும் தம்பி. அதனால் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பதை வித்தியாசமான கதையமைப்பின் மூலம் கூற வருகிறது 'பரோல்' திரைப்படம். படத்தில் அண்ணன் தம்பியாக லிங்கா- கார்த்திக்யை தேர்ந்தெடுத்தது, முதல் பலம். இருவரும்…