டாணாக்காரன் திரை விமர்சனம் !

காவல்துறை பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கும் வரும் காவலாளிகள் அங்குள்ள சிக்கல் நிறைந்த அடக்குமுறையை தாண்டி எப்படி காவல்துறை அதிகாரியா வெளிய வர்றாங்க அப்படின்றது தான் கதை.

இயக்குனர் தமிழ் நுணுக்கமான திரைக்கதை அமைப்புல எல்லோரையும் ஆச்சர்யத்துல ஆழ்த்துறாரு. நிறைய தகவல்களையும், நம்ம பார்க்காத கோணங்களையும் படத்த பயணிக்க வச்சது, படம் பார்க்கும் பார்வையாளருக்கு புது அனுபவமாக இருந்தது.

காவலர் பயிற்சி பள்ளிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பற்றி எந்த படமும் ஆழமாக பதிவு பண்ணாமல் இருந்ததால, அதனை பற்றிய தகவல் நமக்கு தெளிவாக இல்லாமல் இருந்தது. இந்த படத்துல காவலர் பயிற்சி பள்ளிக்குள்ள நடக்குறை அடிமைத்தனம், அடக்குமுறை, வன்முறை, பகுபாடு-னு எல்லாவற்றையும் நுணுக்கமாக பதிவு பண்ணிருக்காரு இயக்குனர்.

படத்துல நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு உண்டான பாத்திரத்தை தங்களோட முழு திறமையையும் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்காங்க, காவல்துறை பயிற்சி பெரும் சக ஆட்களாக விக்ரம் பிரபு கூட பயணிக்கிற அனைவரும், நிஜமான பயிறை எடுக்க வந்தவர்கள் போல, உழைப்பையும், நடிப்பையும் கொடுத்துருக்காங்க. விக்ரம் பிரபு உடைய திரைவாழ்கைல ஒரு முக்கியமான படமாக இந்த டாணாக்காரன் அமையும்.

படத்தின் இரு மிகப்பெரிய தூண்களா பயணித்திருப்பது ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும். பெரிய மைதானத்துல மட்டுமே நடக்குற கதையில, அங்குள்ள மனிதர்களை வச்சே திரையில ஆச்சர்யத்த உருவாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் இசையமைப்பாளர் தன்னுடைய பணியை செவ்வனவே செய்துள்ளார். இயக்குனர் தமிழ், தமிழ் சினிமாவிற்கு ஒரு இனிய வரவு.

அனைவரும் பார்த்து, பாராட்ட வேண்டிய நேர்த்தியான சினிமா இந்த டாணாக்காரன்.