குலுகுலு எப்படி இருக்கு

குலுகுலு எப்படி இருக்கு

குலுகுலு கடத்தபட்ட தன் நண்பனை மீட்க ஒரு நாடோடியின் உதவியை நாடும் நண்பர்கள். இவர்கள் அனைவரும்செய்யும் சாகசங்களே இந்த திரைப்படம். படத்தில் சந்தானம் தான் ஆச்சர்யம். இதுவரை அவர் நடித்த எந்த படத்தின் சாயல் இல்லாமலும், புதுவிதகதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அனைத்திற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. அனைத்தும்தனித்துவமாக இருக்கிறது. எழுத்தாக சிறப்பான ஒரு கதையை உருவாக்கியுள்ளார் ரத்னா. இந்த படம் மற்ற படங்களை போல் அல்லாமல், ஒரு குவர்கி அனுபவத்தை கொடுக்க கூறியது. ஒரு கற்பனைகாமெடி உலகத்தை உருவாக்குவது போல தான் இந்த படம். இந்த படங்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகம்பரிட்சயம் இல்லாதவை. அதனால் இதை பார்ப்பதற்கு வித்தியசமாக இருக்கும். ஆனால் இது தான் சினிமா. சினிமா இதை நோக்கி தான் நகரும். படத்தின் இசை ஒரு தனித்துவமான ஒன்று, இந்த கதையோட்டத்திற்கு ஏற்றார் போலும், படத்தின் விதத்திற்குஏற்றார் போலும் ஒரு துள்ளலான, வித்தியாசமான பாடலும், இசையும்…
Read More
’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்

’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்

    சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது.., “இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்” இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது.., “ரத்னகுமார் எடுக்கும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வகையாக இருக்கும். அவருடைய எழுத்து என்னை ஆச்சர்யப்படுத்தும். படத்தின் இசை சிறப்பாக உள்ளது. ஒரு…
Read More