வலிமை – முழுமை இல்லாத சினிமா.

 

இயக்கம் – H வினோத்

நடிகர்கள்அஜித்குமார் ஹுமா குரேஷி

மூன்று வருட காத்திருப்பிற்கு பிறகு வந்திருக்கும் அஜித்தின் சினிமா ஆனால் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதாஎன்றால் இல்லை.

பைக்ல் செயின் பறிப்பு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து குற்றங்களை தடுக்கமுயற்சிக்கும் ஹீரோ, அந்த கும்பல் அசாத்தியம் நிறைந்த ஒரு கூடாரம் என தெரிந்த உடன் அவர்களை எப்படிசமாளிக்கிறார் என்பதே கதை.

விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரைக்கதைக்கும், வெற்று செண்டிமெண்ட் காட்சிகளால் நிரப்பி வைக்கபடும்திரைக்தைக்கும் இடையில் சிக்கி விழி பிதுங்கி இருக்கிறது வலிமை திரைப்படம்.

முழுமையாக ஆக்‌ஷன் காட்சிகளால் நகர வேண்டிய அமைப்பை கொண்ட திரைக்கதை ஆக்‌ஷன் காட்சிகளைதனியாகவும், மற்ற காட்சிகளை தனியாகவும் தெரியும் படி ஒட்டாமல் தொங்குகிறது.

தனது சாமார்த்தியமான தந்திரத்தால், வேலையில்லாத இளைஞர்களை தன் வசம் இழுத்து குற்றங்களை செய்யவைத்து அதன் மூலம் ஆதாயம் தேடும் வில்லன் கதாபாத்திரம். வில்லன் கதாப்பாத்திரத்தின் வலு, கதையளவில்மட்டுமே உள்ளது, நடிப்பில் பெரிதாக சோபிக்கவில்லை, பல இடங்களில் பழைய கால படங்கள் போல ஓவர்ஆக்டிங் தெரிகிறது. வில்லன் மட்டுமல்ல, படத்தின் பல கதாபாத்திரங்கள் சீரியல் போல் நடிக்கிறார்கள்.

சாமர்த்தியமான வில்லனை சாதூர்யத்தல் துரத்தி பிடிக்கும் வல்லமை கொண்ட கதாநாயகன் பல காட்சிகளில்நம்மை ஆச்சர்யபடுத்துகிறார். இயக்குனரும் பல காட்சிகளில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி சிறந்தசினிமாவை நாம் பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தை கொடுக்கிறார். ஆனால் அந்த காட்சிகள் கடந்துஅடுத்த காட்சிகள் சென்றால், நமது எண்ணத்தை தவிடு பொடியாக்குகின்றனர்.

செயின் அறுக்கும் குற்ற சம்பவத்தை படமாக்கிய விதம் நம்மை படபடக்க வைத்தாலும், காட்சிகள் நகர நகரநம் சோர்வை உணரும் வகையில் திரைக்கதை அமைக்கபட்டுள்ளது. பல திரைக்கதை ஓட்டைகளைதவிர்த்துவிட்டு விறுவிறுப்பான முதல் பாதியை ஓரளவு ரசித்தாலும்,

செண்டிமெண்ட் காட்சிகள் தூவி அடுக்கபட்ட இரண்டாம் பாதி படத்தின் எண்ட் கார்டு எப்போ வரும் எனஎதிர்பார்க்க வைக்கிறது.

அடுத்த காட்சிகளில் தொடர்ச்சியில்லாமல், ஏனோதானோ என இருக்கிறது. படத்தின் ஓப்பனிங்க் பாடலும்தேவையில்லை, செண்டிமெண்ட் பிழிதலும் தேவையில்லை.

ஆக்‌ஷன் காட்சிகளும் சீரான இடைவெளியில் வராமல், அடுத்தடுத்து வருவதால் சில நேரம் ரேஸ் வீடியோக்கள்பார்ப்பது போல் உள்ளது.

சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர்கள் என எதையும் மனதில் வைக்காமல் பார்த்தால் கூட படம் ஈர்க்கவில்லை. அதையும் மனதில் வைத்து பார்த்தால், இன்னும் சோர்வு தான் வருகிறது.