மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன்

மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன்

முன்னணி தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே. பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சினிமாவில் வந்த பிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் தான், உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும், அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா என்றும் கேட்டனர். இக்கேள்விக்கு பதில் அளித்த அவர், "மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய லெஜெண்ட் சரவணன், "சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது.…
Read More
தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜண்ட் விமர்சனம்

தி லெஜெண்ட் திரை விமர்சனம் இயக்கம் - ஜேடி – ஜெரி நடிப்பு - சரவணா, கீத்திகா திவாரி சில பல விளம்பரங்களுக்கு, விமர்சனங்களுக்கு பிறகு, சரவணன் அருள் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். சரவவணன் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. ஜேடி கேரி ஒரு முன்னணி நட்சத்திரத்திற்கு எப்படி படம் செய்வார்களோ அதே போல் ஒரு செட்டப்பை உருவாக்கியிருக்கிறார்கள் வெளிநாட்டிலிருந்து வரும் விஞ்ஞானி சர்க்கரை நோயுக்கு இலவச மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார். மருந்து மாஃபியா அவரை தடுக்க நினைக்கிறது அதை முறியடித்து எப்படி ஜெயிக்கிறார் என்பதே படம். ரஜினியின் சிவாஜி படத்தினுடைய மினி வெர்ஷன் போல் தான் படம் இருக்கிறது. படம் முழுக்க பணமும் பிரமாண்டமும் தெரிகிறது. பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட்,…
Read More