13
May
ஷங்கரின் டைரக்ஷனில் போன 2018- ஆம் வருஷம் துவங்கப்பட்ட படம் தான் இந்தியன் 2 . முன்னதா இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் என்பதால், இந்தியன் 2 படத்தை கமல் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் . குறிப்பாக மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கின்றார் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் விவேக், எதிர்பாராத விதமாக கடந்த 2021 -ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். எனவே இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா இல்லை அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்கவைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என ஷங்கரிடம் ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கிறார்.…