மலையாள படத்தின் ரீமேக் “பயணிகள் கவனிக்கவும்” எப்படி இருக்கு?

பயணிகள் கவனிக்கவும் – ஆஹா தமிழ்

எழுத்து : அஜீஷ் தாமஸ்
இயக்கம்: சக்திவேல்
நடிகர்கள்: விதார்த், கருணாகரன், லட்சுமி சந்திரமௌலி,

 

தவறான தகவலை பரப்புவது, சமூகத்தில் நடக்கும் தீவிரவாதம் என கூற முயற்சிக்கிறது படம்.

மெட்ரோ ரயிலில் தூங்கி கொண்டிருக்கும் அப்பாவி ஒருவரை போட்டோ எடுத்து குடித்துவிட்டு தூங்குகிறார் என சமூக வலைதளத்தில் பரப்பிடும் ஒருவர், அதனால் பாதிக்கபடும் அந்த அப்பாவி, இவர்கள் இருவருக்கும் நிகழும் எதிர்வினைகள் தான் கதை.

விதார்த் தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, தனது நடிப்பின் மூலம் அப்ளாஸ்களையும் வாங்கிகொண்டிருக்கிறார். அவரது நடிப்பு இந்த படத்திலும் தெளிவாகவே உள்ளது. வாய் பேசமுடியாத நபராய் அவரது நடிப்பு, மிகையில்லாமல் துல்லியத்தின் துளியாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் தனது நடிப்பின் மூலம் காட்சியின் ஆழத்தையும், கதையையும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.

சமூகவலைதள பகிர்வினால் ஒரு அப்பாவி எவ்வளவு பாதிக்கபடுகிறான், அதிலிருந்து மீண்டு வர மன ரீதியாகவும், பண ரீதியாவும், எவ்வளவு சிக்கலை சந்திக்கிறான் என்ற கருத்தை கடத்த படத்தின் எழுத்தாளர் உழைத்து இருக்கிறார். கதையிலிருந்து எங்கும் விலகாமல் கதை எதை பேச வருகிறது, எதை கடத்த நினைக்கிறது என்பதை நேர்த்தியாக கொடுக்க இயக்குனர் முயற்சித்து இருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளை அள்ளிய விக்ருதி திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த பயணிகள் கவனிக்கவும். படத்தின் அனைத்து நடிகர்களும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நியாயத்தை சரியாகவே கொடுத்து இருக்கிறார்கள்.

நிச்சயமாக அனைவரும் பார்க்க கூடிய, ஒரு புத்தி சொல்லும் திரைப்படமாக ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது இந்த பயணிகள் கவனிக்கவும். கண்டிப்பாக பார்வையாளர்கள் இந்த படத்தை கவனிக்கலாம்.