‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்ட இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் மற்றும் பிரத்யேக…
Read More
விடுதலை 2 – வெற்றிமாறனின் ஆழமான அரசியல் பாடம் !!

விடுதலை 2 – வெற்றிமாறனின் ஆழமான அரசியல் பாடம் !!

தமிழ் திரையுலகில் குறிப்பிடதக்க படைப்புகளால் புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ளது விடுதலை 2 திரைப்படம். விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து துவங்கி அப்படியே ஆரம்பித்து வாத்தியாரின் வாழ்க்கை கதையை சொல்கிறது விடுதலை 2. வாத்தியார் கைதுக்கு பிறகு காவலதிகாரி, கலக்டர், அமைச்சர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அந்த கைதை எப்படி அறிவிக்கலாம் என விவாதிக்கிறார்கள். கைது விவரம் வெளியில் பரவ அதை தடுக்க நினைத்து, வாத்தியார் விஜய் சேதுபதியை, காட்டுக்குள் சிறு குழுவை வைத்து வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள், ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன?…
Read More
சீனாவில் வெளியாகும் மகாராஜா திரைப்படம்  !!

சீனாவில் வெளியாகும் மகாராஜா திரைப்படம் !!

Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை, சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை, பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மஹாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சியமைப்பு, என அனைத்து தரப்பிலும் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ், இந்திய கலாச்சார பன்முகத்தன்மையை, உலகமெங்கும் அறிமுகப்படுத்தும் வகையில், சீனா முழுதும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது. சீனா வெளியீட்டில், Home Screen Entertainment மற்றும் Nine Knots Entertainment மிக முக்கிய பங்காற்றி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன. அலெக்ஸி வூ, Yi Shi Films கூறியதாவது… "மகாராஜாவை…
Read More
பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!

தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸொடு முதலே  ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர்  விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்  வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது. வாரம் முழுக்க வீட்டில்…
Read More
ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!

ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா?…
Read More
அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”, உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

அக்டோபர் 6 முதல், “பிக்பாஸ் சீசன் 8”, உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

புத்தம் புதிய பல ஆச்சரியங்களுடன், உங்கள் “பிக்பாஸ் சீசன் 8”, அக்டோபர் 6 முதல் !! தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது. சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மிகப்பெரும் புகழைப்பெற்று, மக்களின் மனங்களில் இடம்பிடித்த நிகழ்ச்சி, பிக்பாஸ். கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன், கோலாகலமாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசத்தலான ப்ரோமோ, வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய சீசன் வரும் அக்டோபர் 6 ஆம்…
Read More
இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது! மஹாராஜா பட நன்றி விழாவில் விஜய் சேதுபதி!

இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது! மஹாராஜா பட நன்றி விழாவில் விஜய் சேதுபதி!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகை மம்தா மோகன்தாஸ், “நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய்சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான…
Read More
பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன்…
Read More
மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, விஜய்சேதுபதியும் இயக்குநர் நிதிலனும்.. இந்தப்படம் உங்களுக்கு ஒரு அனுபவம் தரும், பல சர்ப்ரைஸ்கள் படத்தில் இருக்கிறது, தயவு செய்து அதை வெளிப்படுத்தி விடாதீர்கள், முதல் முறை பார்க்கும் அனைவருக்கும் அந்த அனுபவம் கிட்டட்டும் என்றனர். இந்தப்படம் பார்த்த போது கிடைத்தது ஒரு பேரனுபவம்.. எனக்கு விருமாண்டி பார்த்த போது அதன் உருவாக்கத்திலும், அபிராமி இறப்பு முதலாக பல காட்சிகளில் எனக்கேற்பட்ட பாதிப்பும், இந்தப்படத்திலும் பல இடங்களில் கிடைத்தது. சமீபத்தில் தமிழ் சினிமா பழைய மாதிரி இல்லையே என்று ஏற்பட்ட அத்தனை ஏக்கத்தையும், போக்கியிருக்கிறான் மாகாராஜா. கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் எப்படி அணுகப்பட வேண்டும். அதை எல்லாம் எப்படி ரசிகனுக்கு தர வேண்டும் என்றெல்லாம் பாடமெடுத்திருக்கிறது. இந்தப்படம். இதற்குமேல் படிக்காதீர்கள்.. தனது மகளை காப்பாற்றிய குப்பைதொட்டியை திருடர்கள் திருடிவிட்டதாக போலீஸுக்கு போகிறான் ஒரு சாதாரண சவரத்தொழிலாளி. அவனை பைத்தியமாக…
Read More
புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது  விஜய் சேதுபதியின் ’மகாராஜா’!

புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது விஜய் சேதுபதியின் ’மகாராஜா’!

சிறப்பான கதைகளைத் தேர்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கி வருகிறது. ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கு இந்தப் படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டுடியோஸ் நடத்தியது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை.…
Read More