20
Jun
எழுத்து மற்றும் உருவாக்கம்: புஷ்கர் காயத்ரி இயக்கம் : பிரம்மா - அனுசரன் நடிகர்கள்: கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தமிழ் அமேசான் ஒரிஜினாலாக வந்திருக்கிறது இந்த சுழல். ஒரு கிராமத்தில் இருக்கும் சிமெண்ட் பாக்டரி பற்றி எரிகிறது. அதே நேரத்தில் அந்த பாக்டரி யூனியன் லீடர் மகள் காணாமல் போகிறாள். இந்த இரண்டையும் யார் செய்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரிப்பதே கதை. இந்த தொடரின் பலமே திரைக்கதை தான். மொத்தம் எட்டு எபிசோடுகளுக்கு எழுதப்பட்ட திரைக்கதை தேவையில்லாத பாதையில் பயணிக்காமல், கதையை ஒட்டியே பயணிக்கிறது. காணமல் போன ஒரு பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்காக ஆரம்பித்து, கதை நாம் யூகிக்காத பல இடங்களுக்கு பயணிக்கிறது. இது பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது. படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் ஆழமாக உள்ளது. வெப்சீரிஸ்களில் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து…