பயமுறுத்தும் படி இருக்கிறதா The Quiet Place 2

 

இயக்கம் – John Krasinski

நடிகர்கள் – Cillian Murphy, Emily Blunt, Noa Juph

கதை – The quiet Place படத்தின் முதல் பாகத்தின் இறுதியில், தந்தை இறந்து தனது குடும்பத்தையும் குழந்தையையும் ஏலியனிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த குடும்பத்திற்கு என்ன நடக்கிறது எப்படி தப்பிக்கிறது. ஏலியன் அழிந்ததா என்பது தான் இப்படத்தின் கதை.

சத்தம் போட்ட செத்த, எனும் சிம்பிள் கான்செப்டில் ஏலியனை புகுத்தி குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களை தெறிக்க விட்ட படம் தான் The quiet Place. அதன் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் தான் இது. அதில் இயக்குநரும் நாயகனுமான, John Krasinski தன் குடும்பத்தை காக்க இறந்து போக அந்த இடத்திலிருந்து இந்தப்படம் ஆரம்பிக்கிறது.

படத்தின் முதல் காட்சியில் அந்த ஏலியன் எப்படி அவ்ரகள் ஊருக்கு வந்தது என்பதில் ஆரம்பிக்கிறது அந்த ஆரம்பமே அதகளமாக இருக்கிறது. அதன் பிறகு தான் பாதுகாப்பாக இருந்த இடம் அழிந்து போக, அந்த இடத்திலிருந்து வேறு பாதுகாப்பான இடம் தேடி அந்த குடும்பம் பயணிக்க ஆரம்பிக்கிறது. வழியில் அந்த பெண் குழந்தை ஏலியனை அழிக்கும் வழியை தேடுகிறது. அந்த குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள் அதில் ஓரளவு ஜெயித்தும் இருக்கிறார்கள்.

முதல் படத்திலிருந்த ஆச்சர்யம் இதில் இல்லை இதுவும் ஹாலிவுட்டின் ஒரு நார்மலான ஏலியன் படமாக மாறிவிடுவது படத்தின் மீதான ஈர்ப்பை குறைத்து விடுகிறது.
படத்தில் ஏலியன் வரும் இடங்கள் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயெ அந்த சின்னப்பெண் ஏலியனிடம் மாட்டிக்கொள்ளும் காட்சியில் நெஞ்சு படபடவென அடித்து கொள்கிறது. கடைசி காட்சி விறுவிறுப்பாக பயணிக்கிறது ஆனால் மூன்றாம் பாகம் எடுக்காமல் இத்தோடு விட்டுவிட்டால் நன்றாக இருக்கும்.

நாயகன் இறந்து விட்டதால் Cillian Murphy கதாப்பாத்திரத்தை புதிதாக கொண்டு வந்துருக்கிறார்கள் அவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முதல் படன் போல் இப்படத்தில் Emily Blunt க்கு அதிக முக்கியத்துவம் எதுவும் இல்லை. ஏலியன் போன படத்தை விட இந்த படத்தில் கொஞ்சம் தெளிவாக இருக்கிறது. இசை மனதின் படபடப்பை கூட்டுவதில் சரியாக பயன்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு அட்டகாசம். உருவாக்கத்திலும் போன படத்தை விட நல்ல முன்னேற்றம்.

ஒரு நல்ல பரபரப்பான ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி தருகிறது இந்த The quiet Place 2.