சிம்பு ரசிகர்களை கவர்ந்தாரா ? மாநாடு –  திரை விமர்சனம் !

0
263

இயக்கம்வெங்கட்பிரபு

நடிப்புசிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி

கதைநண்பனுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்க, துபாயிலிருந்து வருகிறார் அப்துல்காலிக் (சிம்பு). ஒரு ஆக்சிடெண்டில் சிக்கி கொள்ளும்போது,  போலீஸ் தனுஷ்கோடி (எஸ் ஜே சூர்யா)  சிம்புவை வைத்து முதலமைச்சரை மாநாட்டில் வைத்து கொலை  செய்ய திட்டமிடுகிறார். கொலை நிகழந்த பிறகு, சிம்புவை சுட்டுக்கொள்ள மீண்டும் அதே நாளின் தொடக்கத்தில் கண் விழிக்கிறார் சிம்பு.  ஒருநாளின்லூப்பில்சிக்கிகொள்வளும்சிம்புமுதலமைச்சரைஎப்படிகாப்பாற்றமுயற்சிக்கிறார்அதில்வென்றாராஎன்பதுதான்கதை

ஹாலிவுட்டில் மட்டுமே செல்லுபடியாகும் டைம் லூப் கதையை, தமிழ் மசாலா சினிமா ரசிகனுக்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றி அதில் முன்னணி நாயகனை வைத்து, அட்டகாச மேக்கிங்கில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் மூன்று வருட காத்திருப்பிற்கு பின் வெளியாகியிருக்கும் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

ஹாலிவுட்டில் டைம் லூப் கதைகள் நிறைய வந்திருக்கிறது ஆனால் அதன் சிக்கலான கான்செப்டை ரசிகர்களுக்கு புரிய வைப்பது கடினம் என்பதால், தமிழ் சினிமாவில் யாரும் அதனை முயற்சிக்கவில்லை ஆனால் அதை தனது அநாயசமான திரைக்கதையால் கடந்து சாதித்திருக்கிறார் வெஙகட் பிரபு. இப்படம் சிம்புக்கு மட்டுமல்ல வெங்கட் பிரபுவின் திறமையையும் வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. படத்தில் ஒரு காதாப்பாதிரம் கூட தேவையில்லாமல் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஆயிரம் பின்னணி கதைகள், பரபரக்கு ஜெட்  வேக திரைக்கதை என தமிழில் ஒரு அசத்தலான முயற்சியை செய்து சாதித்திருக்கிறார்கள்.

படத்தில் ஒரே நாள் தான் மீண்டும் மீண்டும் நடக்கிறது என்றாலும், எந்த காட்சியும் மீண்டும் வருவதில்லை ஒவ்வொரு முறை அந்த நாள் திரும்பும்போதும் ஒரு அட்டகாசமான டிவிஸ்ட் படத்தின் கதையில் வந்து நம்மை அசத்திவிடுகிறது. அதிலும் இரண்டாம் பாதியில் சிம்புவுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் படு விறுவிறுப்பு. பல காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது.

நீண்ட இடைவெளைக்கு பிறகு சிம்புவுக்கு ஒரு அசத்தலான கம்பேக், கன கச்சிதமாக கதாப்பாத்திரத்திற்குள் பொருத்திக்கொண்டு அப்துல் காலிக்காக அசத்தியிருக்கிறார். ஒரு நாளில் மீண்டும் மீண்டும் திரும்பும் பலத்தை வைத்து கொண்டு, அதை தன் பலமாக மாற்றிக்கொண்டு சி எம்மை காப்பாற்ற ஓடும்போது நாமும் சேர்ந்து ஓடுகிறோம். அதிலும் ஒய் ஜி மகேந்திரனிடம் மாட்டிக்கொள்ளும் சிம்பு பேசும் வசனங்களிலும் நடிப்பிலும், தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. படம் முழுக்க சிம்பு வியாப்ப்த்திருக்க அவரை ஒரங்கட்டி தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் எஸ் ஜே சூர்யா தியேட்டரையே அலற விடுகிறார். சிம்பு சாகும் ஒவ்வொரு முறையும் பெட்டில் இவரும் மீண்டும் கண் விழிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வில்லத்தனத்தில் புதுமை காட்டி மிரள வைத்து விடுகிறார். சிம்புவுக்கும் இவருக்கும் நடக்கும் விளையாட்டு தான் படத்தை சூடு குறையாமல் கொண்டு செல்கிறது.

வழக்கமாக வெங்கட் பிரபு படத்தில் வரும் காமெடி கூட்டணி நடிகர்கள் இதில் இல்லை. பிரேம்ஜி மட்டும் நண்பராக தேவையான இடத்தில் வந்து போகிறார். நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன் உட்பட பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பரபரப்பான படத்தில் ஒரு பாடல் தான் என்பது ஆறுதல் வில்லனுக்கு நாயகனுக்கு தனித்தனி பிஜிஎம்மோடு, படத்திற்கான பின்னணி இசையில் பின்னியெடுத்திருகிறார் யுவன். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு அபாரம். ஆரம்ப காட்சிகளில் வித்தியாசமாக தெரியும் சிம்பு, க்ளைமாக்ஸ் இறுதியில் நாயக்ன் இண்டலிஜென்டாக எதுவும் செய்யாததை தவிர்த்து, படத்தில் குறைகள் என்று சொல்ல எதுவும் இல்லை. திரையில் ரசிகர்களுக்கு சரியானதொரு விருந்தாக வந்திருக்கிறது இந்த மாநாடு.