07
Jun
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது. இந்நிகழ்வினில் கலை இயக்குனர் மெவின் கூறியதாவது... இந்த படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்துள்ளோம். ஆர்டிகள் 15 நிறைய விருது வாங்கிய படம், அதன் சாராம்சம் குறையாமல் அருண் உருவாக்கியுள்ளார். உதய் சார் அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அருண்ராஜா உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம். படக்குழு அனைவருக்கும் நன்றி. நடிகர் மயில்சாமி கூறியதாவது.... நெஞ்சுக்கு நீதி நன்றி விழாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.…