செல்ஃபி திரை விமர்சனம் !

 

இயக்கம்மதிமாறன்

நடிகர்கள்ஜீவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன்

கதைசென்னையில் இஞ்னியரிங் படிக்க வரும் கிராமத்து மாணவன், தன் செல்வுகளுக்காக காலேஜ் சீட்பிடித்து தரும் புரோக்கர் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் அந்த மாஃபியா அவனை எங்கு கொண்டு செல்கிறதுஎன்பதே படம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வியாபாரமே, கல்வி முதற்கொண்டு வியாபரத்தின் கரங்கள்எங்கெங்கோ நீள்கிறது. இன்றைய மாணவர்கள் மீது திணிக்கப்படும் நவீன வாழ்க்கை அதற்கு பலியாகிஅவர்கள் செய்யும்

குற்றங்கள் அதன் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது இந்தப்படம். மாணவர்களுக்கு ஒரு பாடம்.

கல்லூரி படிக்கும் மாணவர்கள் குற்ற செயலில் எப்படி சிக்குகிறார்கள், கல்லூரி சீட்டுக்கும் மெடிகல் சீட்டுக்கும்பின்னால் உள்ள மாஃபியா அனைத்தும் மிக விவரமாக பேசியதில் கவர்கிறது திரைக்கதை.

முதல் படத்திலேயே சமுக விழிப்புணர்வை தந்து கவர்கிறார் இயக்குநர் மதிமாறன். படத்தின் திரைக்கதைமுழுதும் பல விவரங்கள் கொட்டி கிடப்பது அழகு

ஜீவி பிரகாஷ் நடுத்தர குடும்ப முகம் எல்லா கதாபாத்திரத்திலும் இன்றைய இளைஞர்களுடன் எளிதில்ஒத்துபோய்விடுகிறார். அவரை இளைஞர்கள் தங்கள் பிரதியாய் பார்ப்பது படத்திற்கு பலம்.

கௌதம் மேனனுக்கு பிரத்யேகமானதொரு உடல் மொழி இருக்கிறது அது அவரது பாத்திரத்திற்கு பலமாகஇருக்கிறது அவர் டயலாக் இல்லாமலே ஒரு வலுவான பாத்திரத்தை திரையில் கொண்டு வந்து விடுகிறார்.

ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக தந்திருக்கிறார்கள்.

எல்லாம் சரியாக இருந்தும் படத்தின் மீது நமக்கு முழு ஈர்ப்பு வராமால் ஏதோ ஒன்று தடுப்பது போல்திரைக்கதை சுவாரஸ்யமின்றி நகர்கிறது க்ளைமாக்ஸில் இருக்கும் பரபரப்பு படம் முழுதும் இல்லை ஆனாலும்அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படமாகவே வந்திருக்கிறது செல்ஃபி