செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்…
Read More
எப்படி இருக்கிறது  டியர் திரைப்படம் ?

எப்படி இருக்கிறது டியர் திரைப்படம் ?

ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'டியர்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியே மிக வித்தியாசமான கூட்டணி, இவர்கள் இருவர் ஜோடியில், குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் டியர். சில மாதங்கள் முன்பாக குறட்டைப் பிரச்சனையை மையமாக வைத்து குட் நைட் என்ற படம் வந்தது. மணிகண்டன் நடிப்பில் வந்திருந்த அந்த திரைப்படம், குறட்டை பிரச்சனையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பங்களையும் விரிவாக அலசி இருந்தது. கிட்டத்தட்ட டியர் படத்தின் கதையும் அதேதான். ஆனால் இந்த படத்தில் குறட்டை பிரச்சனை இருப்பது கதாநாயகிக்கு!! நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறு பிரச்சனை எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதை திரைக்கதை ஆக்கும் பாடங்கள் பெரும்பாலும் ஜெயித்து விடும். அந்த வகையில்…
Read More
வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள்! “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்!

வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள்! “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார்!

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை நந்தினி பேசியதாவது.... இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் இளவரசு பேசியதாவது.,, பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன…
Read More
‘கள்வன்’ உள்ளங்களை கவர்கிறானா?

‘கள்வன்’ உள்ளங்களை கவர்கிறானா?

தயாரிப்பு - டில்லி பாபு நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா இயக்கம் - PV ஷங்கர் அறிமுக இயக்குநர் PV ஷங்கர் இயகியுள்ள இப்படம், கோவை வட்டார வழக்குடன் ஒரு மலை கிராம மக்களின் கதையை சொல்கிறது. சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு வாலிபன் வாழ்க்கையில் காத லும் அரவணைப்பும் கிடைக்க, அவன் என்ன செய்வான் என்பது தான் கள்வன். சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் யானை மிதித்து சிலர் இறக்கிறார்கள், அங்கு சில திருட்டு வேலைகள் செய்யும் இளைஞனான ஜீவி, இவானாவை காதலிக்கிறார். அவரைக் கவர்வதற்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தன்னோடு அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். இந்த நேரத்தில் அக்கிராமத்தில் யானை மிதித்து பல பேர் சாக, அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு நடக்கும் திருப்பங்களும், சுவாரசியங்களும் தான் திரைப்படம்…
Read More
ரிபெல் போராளியாக மாறும் மாணவன் !!

ரிபெல் போராளியாக மாறும் மாணவன் !!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரிபெல். தமிழ் சினிமா வர வர கதை சொல்வதை தவிர்த்து, போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சமூக கருத்துக்களையும் மட்டுமே சொல்வதை முதன்மையாகக் கொண்டு சினிமா எடுத்து வருகிறது. அந்த வகையில் கேரள பகுதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் கதையை சொல்லும் படமாக வந்திருக்கிறது ரிபெல் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் மூணாறு பகுதி கேரளாவுடன் இணைக்கப்பட, அங்கு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் தமிழர்களும், அருகில் அமைந்திருக்கும் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களும், எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் மையம். தேயிலைத் தோட்டத்தில் கஷ்டப்படும் பெற்றோர்களின் கஷ்டத்தை போக்க, படித்து பெரியளாகும் கனவில் கல்லூரிக்கு செல்கிறார்கள் ஜிவி பிரகாஷும் அவரது நண்பர்களும், அங்கு கல்லூரியில் கேரள மாணவர்கள் இரு கட்சிகளாக பிரிந்து தமிழ் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள். அவர்களின் கொடுமை எல்லை மீறி…
Read More
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம். உடைகள் - சபீர் நிழல்படம் - Rs ராஜா PRO- குணா.
Read More
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளி

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளி

  ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் கலந்துகொண்ட   ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது... சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள்…
Read More
ஜீ. வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ படத்தை ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்!

ஜீ. வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ படத்தை ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்!

  இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். பிரகாஷ் பேசுகையில், '' என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு 'கிங்ஸ்டன்' போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார். தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ்…
Read More
இது என்னுடைய முதல் படம்! ‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்சிவசம் !

இது என்னுடைய முதல் படம்! ‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்சிவசம் !

  S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் பேசியதாவது, "இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் அருண் தந்த வாய்ப்பு இது. என்னை நம்பிய தயாரிப்பாளர் சித்தார்த்துக்கும் நன்றி" இயக்குநர் அருண் பேசியதாவது, "நானும் சித்தார்த்தும் சேர்ந்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். படம் ஆரம்பிக்கும் போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே நம்பிக்கைதான் இப்போது வரை இருக்கிறது. என்னைவிட ஒரு நடிகராக தயாரிப்பாளராக இந்தப் படத்தைத் தூக்கி சுமந்தது சித்தார்த்தான். எந்த தடங்கலும் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்தோடு படம் செய்ய வைத்தார்கள். இந்தப் படம் இந்தளவு நன்றாக வர துணையிருந்த தொழில்நுட்பக்குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் முதல் படம் போல நினைத்து…
Read More
தமிழின் முதல் பேரலல்யுனிவெர்ஸ் படமான ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தமிழின் முதல் பேரலல்யுனிவெர்ஸ் படமான ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'அடியே'.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், '' அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப்…
Read More