தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படும் ‘பிரியாலால்’!

மலையாள நடிகையான பிரியால்லால் – தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜீனியஸ் ‘ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படம் வெளியாகி, சிறந்த நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றார். அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார். படிப்பை முடித்து விட்டு இப்பொழுது, தெலுங்கு படமான ‘குவா கோரிங்க’ (Love Birds) படத்தில் அறிமுகமாகிறார். டிசம்பர் 17-ம் ஆமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது . பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது . கல்லூரி காதலை மய்யமாக கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன் சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் . சமீபத்தில் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது . கொரோனா லாக் டவுண் காரணமாக படத்தின் வெளியீட்டு தாமதமானதால் படம் முடிந்தும் ஒரு வருடமாக தன்னம்பிக்கையோடு ‘குவா கோரிங்கா’வை ஆவலுடன் காத்திருக்கிறார் பிரியாலால் .

‘ஜீனியஸு’க்கு பிறகு தனக்கு தமிழில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வந்த போது படிப்பை முடிக்க வெளிநாட்டில் இருந்ததாலும் , தெலுங்கு படம் நடித்து முடிக்க வேண்டி இருந்ததாலும் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்த முடியாமல் போனதில் வருத்தமடையும் இந்த மலையாள மங்கை இனி எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டேன்.. தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசையும் லட்சியமும் என்கிறார். இதற்காக தமிழ் நன்றாக படிக்கவும் பேசவும் கற்று கொண்டுள்ளார்.

பிரியாலால் துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து, லண்டனில் படித்து வளர்ந்த பிரியா சிறு வயதிலிருந்தே நடனம் கற்று வந்துள்ளார் . சிறுவயதிலேயே சினிமா நடிகை ஆக வேண்டும் என்று மனதில் ஆசை வளர்த்த பிரியாலால் ஒரு முறை விடுமுறை காலத்தில் இந்தியா வந்த போது , தனது பனிரெண்டாம் வயதில் மோகன்லால் சுரேஷ் கோபி நடித்த ‘ ஜனகன் ‘ படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்து தனது சினிமா பிரவேசத்தை துவங்கினார் . அவ்வப்போது விடுமுறை காலங்களில் மட்டும் இந்தியா வந்து படங்களில் நடித்து வந்த இவர் பட்ட படிப்பு முடித்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவதற்க்கென்றே கேரளாவில் குடிபெயர்த்துள்ளார்.