பருந்தாகுது ஊர்க்குருவி திரைவிமர்சனம்

 

இயக்கம் – தனபாலன் கோவிந்தராஜ்
நடிகர்கள் – விவேக் பிரசன்னா , நிஷாந்த் ருஷோ, காயத்ரி அய்யர்
இசை – ரஞ்சித் உண்ணி
தயாரிப்பு – சுந்தர் கிருஷ்ணா
, வெங்கி சந்திரசேகர், சுரேஷ்

கதைசுறுக்கம் : மாறன் என்ற கதாபாத்திரம் ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க காட்டிற்குள் தனியாக தங்கி இருக்கிறார், அப்போது ஒரு கும்பல் அவனை தாக்குகிறது, அந்த கும்பலிடமிருந்து ஆதி என்ற ஒரு திருடன் அவனை காப்பாற்றுகிறான் , இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை ,

இந்த படத்தில் விவேக் பிரசன்னா மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆதி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகன் நிஷாந்த் ருஷோ நடித்துள்ளார்

சின்ன சின்ன திருட்டுகள்-அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் ஆதி (நிஷாந்த் ரூசோ). ஒரு நாள் இவர் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு தகவல் வருகிறது. அந்த இடத்திற்கு வழிகாட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை இழுத்துக்கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார், போலீஸ் அதிகாரி போஸ்.

ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் கெஞ்சுகிறார். அந்த பெண் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிந்து கொள்கிறார், ஆதி. சிறிது நேரத்திற்குள் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் மீண்டும் வருகிறது.

அவர்களிடமிருந்து ஆதி மாறனை காப்பாற்றினாரா? மாறனை காப்பாற்றுமாறு கெஞ்சும் அந்த பெண் யார்? மாறனை அந்த கும்பல் கொல்ல முயற்சிப்பது ஏன்? போன்ற பல கேள்விகளுடன் சுவாரஸ்யமே இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை.

சர்வைவல்-த்ரில்லர் வகை கதையாக இருந்தாலும், அந்த ஜானருக்கு ஏற்ற வேகம் படத்தில் ஒரு இடத்தில் கூட இல்லை. எதிர்பார்ப்புகளுடன் வராத ரசிகர்கள் கூட, மொக்கையான திரைக்கதையால் மிகவும் ஏமாற்றம் அடைந்து போகின்றனர். வயிற்றில் குத்து வாங்கியும், மண்டையில் அடி வாங்கியும் ஒரு நாள் முழுவதும் சோறு தண்ணி இல்லாமல் விவேக் பிரசன்னாவின் கதாப்பாத்திரம் உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை. க்ளைமேக்சில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

May be an image of 1 person, beard and text

ஊர் குருவிக்கு பருந்தாகாமல் விட்டால் பரவாயில்லை, ஆனால்பறக்க கூட தெரியவில்லையென்றால், கஷ்டம் தான்..