ரஜினியுடன் இணைகிறார் இயக்குநர் வெற்றிமாறன் !

0
152

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது தான் இன்றைய தமிழ் சினிமாவின் ஹைலைட். இந்த வரிசையில் பல இயக்குநர்கள் காத்திருக்க, அவர்களை முந்தி இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பல தசாப்ங்களாக தமிழ் திரையுலகில் மிகப்பெரும் வசூல்மன்னனாக வலம் வருபவர் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகின் ஒவ்வொரு இயக்குனருக்கும் அவருடன் இணைவதே மிகப்பெரும் கனவு. இந்த நிலையில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு, எந்த இயக்குநருடன் இணைந்து படம் செய்யப் போகிறார் என பெரும் பட்டிமன்றமே நடந்து வந்தது. இதில் பல முன்னணி இயக்குநர்களின் பெயர் அடிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக புகழ் பெற்றிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் பல மாதங்கள் முன்பே ரஜினியிடம் கதை சொல்லியிருந்தார் இந்நிலையில் தற்போது அந்தக்கதையை படமாக்கலாம் என ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை தயாரிப்பாளர் தாணு மற்றும் இளையராஜா இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் இந்த செய்தியினை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.