நடிகரும் தயாரிப்பாளருமான அகில் ‘எஸ்.கே.எம் சினிமாஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்கவுள்ளார்!

நடிகரும் தயாரிப்பாளருமான அகில் ‘எஸ்.கே.எம் சினிமாஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்கவுள்ளார்!

  அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் . இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன்னை நிரூபித்திருக்கிறார். சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக்கொண்டவர் எஸ்.கே.எம சினிமாஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பு செய்கிறார். மக்கள்…
Read More
பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் படத்தின் பூஜை ! நடிகர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்!

பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் படத்தின் பூஜை ! நடிகர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்!

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம் பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார்.மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1 அன்று படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, 'சித்திரம் பேசுதடி', 'பள்ளிக்கூடம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'மனிதன்', 'சென்னையில் ஒரு நாள்', 'லக்ஷ்மி', 'தலைவி', உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி…
Read More
ரஜினியுடன் இணைகிறார் இயக்குநர் வெற்றிமாறன் !

ரஜினியுடன் இணைகிறார் இயக்குநர் வெற்றிமாறன் !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது தான் இன்றைய தமிழ் சினிமாவின் ஹைலைட். இந்த வரிசையில் பல இயக்குநர்கள் காத்திருக்க, அவர்களை முந்தி இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல தசாப்ங்களாக தமிழ் திரையுலகில் மிகப்பெரும் வசூல்மன்னனாக வலம் வருபவர் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகின் ஒவ்வொரு இயக்குனருக்கும் அவருடன் இணைவதே மிகப்பெரும் கனவு. இந்த நிலையில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு, எந்த இயக்குநருடன் இணைந்து படம் செய்யப் போகிறார் என பெரும் பட்டிமன்றமே நடந்து வந்தது. இதில் பல முன்னணி இயக்குநர்களின் பெயர் அடிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக புகழ் பெற்றிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் பல மாதங்கள் முன்பே ரஜினியிடம் கதை சொல்லியிருந்தார் இந்நிலையில் தற்போது அந்தக்கதையை படமாக்கலாம்…
Read More
கர்ணன் வருவான் .,வெல்வான் – கலைப்புலி தாணி நம்பிக்கை!

கர்ணன் வருவான் .,வெல்வான் – கலைப்புலி தாணி நம்பிக்கை!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . கலைப்புலி S தாணு பேசியது, உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குனர் மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் இல்லையே என்ற குறையை எனக்கு மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ். நட்டி நடராஜ் எங்கள் குடும்பத்துப் பிள்ளை. வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக் கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.. மாரி செல்வராஜ் என்னிடம் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான்.…
Read More
மிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! – கலைப்புலி தாணு பாராட்டு!!

மிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! – கலைப்புலி தாணு பாராட்டு!!

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீமான், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி நடித்துள்ள படம் மிக மிக அவசரம். கதை, வசனம் - ஜெகன்நாத். ஒளிப்பதிவு - பாலபரணி, படத் தொகுப்பு - சுதர்சன். இசை - இஷான் தேவ். மக்கள் தொடர்பு- எஸ் ஷங்கர். தயாரிப்பு, இயக்கம்- சுரேஷ் காமாட்சி. பெண் போலீசார் பிரச்சினைகளை அலசும், அதே நேரம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது மிக மிக அவசரம். இந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல 'டாக்' உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. படம் பார்த்து…
Read More
சினிமாவுக்கு நாங்கள் எதிரி அல்ல! – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

சினிமாவுக்கு நாங்கள் எதிரி அல்ல! – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

பதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் 'எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்'. ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு போட்டியாக வர வேண்டும் என்று வாழ்த்தினார். இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில் தான் அன்புமணி ராமதாஸை சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. அரசியலில் எதிர் துருவங்களில் இருந்தாலும் நட்பு தொடர்கிறது. ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும்…
Read More
வேலையில்லா பட்டதாரி 3 வரும் – அப்பப் பாருங்க! – தனுஷ் பேட்டி!

வேலையில்லா பட்டதாரி 3 வரும் – அப்பப் பாருங்க! – தனுஷ் பேட்டி!

கலைப்புலி எஸ் தாணு-வின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2. வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும்  கலந்து கொண்டார். இதில் நடிகர் விவேக் பேசும் போது, “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது.…
Read More