19
Aug
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையரங்களில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தை தவிர அண்டை மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் நெல்சன் பேசியதாவது சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி…