ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.
இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.
முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசப் பாதுகாப்பு, கடற்படை, இராணுவ ஆபரேஷன் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'ஆபரேஷன் அரபைமா!'August 12, 2021
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படத்தின் பெயரை மாற்றிய படக்குழு! உண்மை சம்பவம் தான் காரணமா!July 6, 2023
‘கன்னி மாடம்’படக்குழு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றி கொண்டாட்டம்!February 24, 2020
ஸ்டண்ட் யூனியன் விழாவில் சேதுபதி ரத்ததானம்!April 17, 2018
அனிருத்தின் துள்ளல் இசையில் நடனமாடும் ஷாருக்கான் ! வெளியானது " வந்த எடம் " பாடல்!July 31, 2023