அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் முதலாக குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்து திறமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஆனால் இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவன் படத்தைத் தான் இயக்கியிருந்தார். தற்போது பல ஆண்டுகளுக்கு மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார்.

அமீர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ளதாகக்.கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதுகிறாராம்.

வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகறார். அந்தப் படத்திலும் சூரி தான் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது அமீர் படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக சூரியை இனி ஹீரோவாக மட்டுமே பார்க்கலாம் போலிருக்கிறது.