மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா ‘அகோரி’ என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில், இப்போது அடுத்து ‘அனு நாகி’ என்கிற படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அறந்தை.கே.ராஜகோபாலும் இணைந்து தயாரிக்கிறார். முக்கியமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கவுள்ளனர். ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள் . மைம் கோபி, ரியாஸ்கான், மற்றும் ‘காலா’ படப் புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.
‘ராட்சசன்’ பட வில்லன் சரவணன், ராஜா ‘ரங்குஸ்கி’ விஜய சத்யா, ஆதவ், ‘தொடரி’ ராஜகோபால், ரியமிகா, சம்யுக்தா, ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்குலகின் முக்கியமான நடிகர் ஒருவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,
ஒளிப்பதிவு-விசாக், இசை – ஸ்ரீசாஸ்தா, படத் தொகுப்பு – பாசில், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, மற்றும் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பலரும் இப்படத்தில் பணி புரிகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆர்.பி.பாலா எழுத அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். D படத்தை இயக்குகிறார்.
இந்த ‘அனுநாகி’ தீமைக்கும், நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதலைச் சொல்லும் படம். இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப் படம் என்றாலும் இதில் நட்பு, காதல், அன்பு , காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் வகையில் தயாராகவுள்ளது.
மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.