எழுத்து – இயக்கம்– மனோ வெ கண்ணதாசன்
நடிகர்கள் – ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதாஸ்ரீநிவாசன்
விக்னேஷ் சண்முகம்
கதை – ஒரு பெண் நாவலாசிரியர் கொலை செய்யப்படுகிறார். அதனைஒருபோலீஸ்விசாரிக்கஆரம்பிக்கஉடனேகொலையாளியும்மாட்டிக்கொள்கிறான்ஆனால்அவனைபணம்தந்துகொலைசெய்யச்சொன்னதுயார்என்பதுமர்மமாகஇருக்கஅதைவிசாரிக்கஆரம்பிக்கிறதுபோலீஸ்அதில்அவிழும்முடிச்சுக்கள்தான்படம்
படம் என்னவோ ஒரு கொலையும் அதனை விசாரிக்கும் தருணங்களும் தான் என்றாலும் படம் பேசும் பொருள் கொஞ்சம் முக்கியமானதும் விவாதத்திற்குரியதும் கூட
பெண்கள் சுதந்திரத்தை அவர்களின் பாலியல் சுதந்திரத்தையும் காதல் காமம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறது இந்தப்படம்.
படம் ஆரம்ப காட்சியே அந்த சுற்றி வளைப்பும் இல்லாமல் கொலையில் ஆரம்பமாகிறது. கொலை நடந்த அடுத்த காட்சியில் விசாரணையும் ஆரம்பமாகிவிடுகிறது அங்கேயே நம்மையும் படத்திற்குள் இழுத்து விடுகிறார்கள்.
ஆரம்ப சில காட்சிகளில் கொலை செய்த்வனையும் கண்டுபிடித்து விட்டாலும் ஏவியது யார் என்ற புள்ளியை வைத்துக்கொண்டு திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் இயக்குநர் மனோ வெ கண்ணதாசன்.
ஒரு பெண்ணை பாலியல் சுதந்திரம் கொண்டவளாக காட்டுவதும் பல ஆண்களுடன் தொடர்பு கொள்பவளாகவும் காட்டுவதும், அவளை நாயகியாக காட்டுவதும், தமிழ் சினிமாவில் கத்தி மேல் நடப்பது போன்றது. ஆனால் அதை பார்வையாளனுக்கு அருவருப்பு வராமல் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நியாயத்தை காட்டியதற்காக பாராட்டலாம்.
ஒரு கொலை விசாரணை படத்தில் யார் கொலையாளி என்பது தான் படம் ஆனால் அதை பார்வையாளன் யூகித்து விட்டால் படம் நிற்காது ஆனால் இப்படத்தில் அந்த விசயத்தில் ஜெயித்திருக்கிறார்கள் அடுத்தடுத்த க்ளுக்கள் போலீஸ் விசாரிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். க்ளைமாக்ஸில்நமக்குஆச்சர்யம்தந்துசஸ்பென்ஸைஉடைத்திருப்பதுஅழகு
நடிகர்கள் அனைவரும் புதிது என்றாலும் படத்திற்கு தேவையானதை சரியாக செய்துள்ளார்கள். ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன் இருவரும் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் இசை படத்தோடு ஒட்டவில்லை. கேமரா படத்தின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது.
படம் ஒரு நாவலை படிப்பது போன்று இருப்பதும் சினிமா பூச்சு இல்லாமல் கொஞ்சம் நாடகத்தன்மையுடன் இருப்பதும் மைனஸ்
இறுதிபக்கம் சுவாரஸ்யமான திரில்லர்
தயாரிப்பு – ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில்
சிலம்பரசன் | கிருபாகர் | செல்வி வெங்கடாசலம்… தயாரித்துள்ளனர்
நடிகர்கள்
ராஜேஷ் பாலச்சந்திரன் as குமார் – அம்ருதா ஸ்ரீநிவாசன் as இயல்
விக்னேஷ் சண்முகம் as பிரசாந்த் – கிரிஜா ஹரி as ஜெனிபர்
ஸ்ரீ ராஜ் as மிதுன் – சுபதி ராஜ் as ராமசாமி
எழுத்து – இயக்கம்
மனோ வெ கண்ணதாசன்
ஒளிப்பதிவு
பிரவின் பாலு
இசை
ஜோன்ஸ் ரூபர்ட்
படத்தொகுப்பு
ராம் பாண்டியன்
ஒலி வடிவமைப்பு
ராஜேஷ் சசீந்திரன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்
சுமேஷ்
கலை
ஜெய் J திலிப்
ஒப்பனை
திவ்யா M
நிர்வாக தயாரிப்பு
மனோ வெ கண்ணதாசன்
மக்கள் தொடர்பு
சக்தி சரவணன்