தமிழ் சினிமாவின் பொன் மகுடம்  ஜெய்பீம் !

தமிழ் சினிமாவின் பொன் மகுடம் ஜெய்பீம் !

இயக்கம் - த.செ.ஞானவேல் நடிகர்கள் - சூர்யா, மணிகண்டன், லியோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் கதை - மனிதனின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும், கள்ளர் இனக்குழுவில் ஒரு சிலரை, ஒரு கொள்ளைவழக்கில் போலீஸ் தவறுதலாக கைது செய்து போகிறது.  அவர்களை சித்தரவதைக்கு உள்ளாக்கி குற்றத்தைஒப்புக்கொள்ள சொல்கிறது. அதில் அவர்கள் தப்பி விட்டதாக அவர்களின் குடும்பத்திடம் சொல்ல, கணவனைகாணாத மனைவி, தன் கணவனை மீட்டு கொடுக்க சொல்லி வக்கீல் சந்த்ருவை அணுகுகிறார். அவர்களைநீதிமன்றம் மூலம் கண்டுபிடிக்கிறாரார சந்த்ரு என்பது தான் கதை. தமிழ் சினிமாவுக்கு மிக நீண்ட காலம் கழித்து ஒரு அற்புதமான படைப்பாக பலரது மனதையும் கலங்கடிக்கும்படைப்பாக உருவாகி, வந்திருக்கிறது ஜெய் பீம். ஒரு இனக்குழு மொத்தமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை, அவர்களின் உரிமைகள்மறுக்கப்பட்டதை, அவர்களின் வாழ்வியலோடு நெருங்கி, அச்சு அசலாக இரத்தமும் சதையுமாக  ஒருஅற்புதமான படைப்பாக உருவாக்கியதற்கு மொத்த குழுவிற்கும் பூங்கொத்துக்கள். ஒரு படம் என்ன செய்ய வேண்டும்…
Read More